பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பட்டினத்தார் - படைப்புகள் + 31 + மிண்டர்மிண் டித்திரி வார்எனக் கென்இனி நானவன்றன் தொண்டர்தொண் டர்க்குத் தொழும்பாய்த் திரியத் தொடங்கினனே (38) இறைவனுக்கு அன்பு செய்யாதவர்கள் துன்புறுவார் கள். அவனுடைய தொண்டர்க்குத் தொண்டனாகவுள்ள தனக்கு யாதொரு அச்சமும் இல்லை என்று இப்பாட லில் தெளிவிக்கின்றார். இங்ங்னமே கோயில் நான்மணி மாலையிலுள்ள பாடல்கள் யாவும் உயர்ந்த நுண் பொருளை அறி வுறுத்தி நிற்றல் அறிந்து மகிழ்தற் பாலதாகும். இந்த நான்மணிமாலையிலுள்ள சந்தவிருத்தங்கள் (11,15) அருணகிரிநாதர் பாடியருளிய திருப்புகழ் யாப்பிற்கு அடிப்படையாக அமைந்துள்ளன. தாளத்தொடு பொருந்த அமைந்த இச்சந்த விருத்தங்களின் யாப்பமை தியினைப் பின்பற்றி அடிதோறும் இறுதிக்கண் வழங் கும் தனிச் சொற்களை தொங்கல் என வழங்கும் தனிச் சொற்களைச் சேர்த்து நோக்குங்கால் இத்தகைய திருப் புகழ்ச் சந்தங்கள் உருவாதல் காணலாம். செந்தமிழ்ப் பாடல்களின் தாள அமைதிக்குச் சிறந்து விளங்கும் இவ்வகைப் பாடல்கள் செந்தமிழ்க் கடவுளாகிய முரு கப் பெருமானது பொருள் சேர்புகழைச் சீர்பெறல் விரித்துரைத்தற்கு ஏற்றனவாக அமைந்தமையால் இவ் வகைப் பாடல் களையே அருணகிரிநாதர் முருகன் புகழ் பாடுதற்குரிய சந்தப் பாடல்களாகத் தேர்ந்தெடுத்துக் கொள்வாராயினர். இத்திருப்புகழ் யாப்பு முதன் முதல் இக்கோயில் நான்மணிமாலையில் கருக்கொண்டு தோன் றிப் பின்னர் அருணகிரிநாதரது வாக்கின் திறத்தால் திருப்புகழ்ப் பாடல்களாக உருப்பெற்று வளர்ந்தது எனக் கூறுதல் பொருந்தும் எனக் கருதலாம். 5. யாழ் நூல் 388-390ஆம் பக்கங்களைக் காண்க,