பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 46 + பட்டினத்தடிகள் என ஆளுடைய அரசரும் அருளிய பொருளுரைகளை இனிது புலப்படுத்தி அடிகளது சமயப் பொதுமையை நன்கு அறிவுறுத்துவனவாதல் கண்டு மகிழ்தற்பாலது. 'அன்றினர் புரங்கள் (16) எனத் தொடங்கும் பாடல் இறைவன் எவ்வுயிர்க்கும் தன்னருளை உரிமைப் படுத்தி வைத்துள்ள திறத்தையும் அப்பெருமானை நினைந்து உய்தி பெறாத தீவினையாளர்களது அறியா மையையும் கூறி இரங்குவதாக அமைந்தது. உயிர்களது நலம் கருதி உடல் கருவி, நுகர்பொருள் என்பவற்றை வழங்கியருளிய இறைவன் தன் அருளின் பப் பெருவாழ்வை எவ்வுயிர்க்கும் உரியதாக அமைத்து வைத்துள்ளானாதலின், அவன்பால் ஒரு குற்றமும் இல்லை. அப்பெருமானை நினைந்து போற்றி அவனரு ளால் இடர்ப்பகைகளைக் களைந்து கூற்றுவனது ஆற் றலை அழித்து இறப்பையும் பிறப்பையும் இகழ்ந்து வானோரது பசுவாகிய காமதேனுவின் கன்றைப் போன்று கவலையற்றுத் திரியும் பேரின்பப் பெருவாழ் வினைப் பெறும் வசதி, எல்லா மக்களுக்கும் பொதுவாக இறைவனால் அளிக்கப் பெற்றுள்ளது. அவ்வசதியைப் பயன்படுத்திக் கொள்ளாத தீவினையாளர் கண்ணதே குற்றம். அஃது எவ்வாறெனில், அறு. சுவையுடன் கூடிய நல்ல உணவு சமைக்கப் பெற்றிருக்கவும் அத னைப் புசியாது ஒருவன் பசியால் வருந்துதல் அவ்வுண வின் குற்றமன்று. நல்ல மணப்பொருள் விரவிய இன் சுவைத் தண்ணிர் இருக்கவும் நீர் வேட்கை யுடையான் ஒருவன் அந்நீரைப் பருகாது வருந்துதல் நீரின் குற்ற மன்று. நன்னிழலைத் தரும் பூஞ்சோலை வழியிடையே இருக்க அவ்வழியே செல்வான் ஒருவன் அதன்கண் தங்கி இளைப்பாறாது உடல் வியர்க்கக் கடுவெயிலில் நடந்து வருதல் நிழலின் குற்றமன்று. இங்ங்ணம் அடி கள் இறைவனது பெருங்கருணத் திறத்தையும் அத னைப் பயன்படுத்திக் கொள்ளாத தீவினையாளர்களின்