பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 50 + பட்டினத்தடிகள் ஒளிதரு மேனிஎம் ஏகம்ப னேஎன்று உகந்தவர்தாள் தளிதரு துளிஎன் றன்தலை மேல்வைத்த தன்மைபெற்றே (4) வணக்கம் தலைநின் திருவடிக் கேசெய்யும் மையல் கொண்டோர் இணக்குஅன்றி மற்றோர இணக்குஅறி வோம்.அல்லோம் வல்அரவின் குணக்குன்ற வில்லி குளிர்கச்சி ஏகம்பம் பாடின்அல்லால் கணக்குஅன்று மற்றொரு தேவரைப் பாடும் கவிநலமே (7) இவற்றில் சிவபெருமானுக்குத் தொண்டு பட்டதன் பயன் அவன் அடியார்க்குப் பணி செய்து ஒழுகுதலா கும்; அவர்களது திருவடித் துளியைத் தலைமேற்கொள் வார் உள்ளம் தெளிவு பெறுதலால் அவர்கள் சிவனருள் பெறுதல் ஒருதலை; சிவபெருமான் திருவடியை வணங் குதற்கே தம் தலையைப் பயன்படுத்தப் பெருவேட்கை யுடைய மெய்யடியார்களோடு இணங்கிப் பழகுத லன்றி ஏனையவரோடு தாம் நெருங்கிப் பழகுவது இல்லை; பிற தெய்வங்களை இறைவனாக எண்ணிப் புலமை மிக்கேள் பாடும் பாடலின் பொருள் முடிவில் ஏகம் பவாணனாகிய முழு முதல் பொருளைச் சென்று சார்கின்றது” என்ற கருத்துகள் அடங்கியுள்ளதைக் காணலாம். இவற்றால், அடியார்க்குத் தொண்டு புரிந்து வாழ்தலில் அடிகள் கொண்டிருக்கும் மனவுறுதி தெளி வாகின்றது. பகை வேந்தரைப் பொருது வெல்லும் ஆற்றல் மிக்க நால்வகைச் சேனைகளையுடைய பெருவேந்தரா யினும் எவ்வுயிர்க்கும் இறைவராகிய ஏகம்பவாணரது திருவருள் வண்ணமாகத் திகழும் திருநீற்றினைத் தம்