பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை (திரு. எஸ்.தியாகராசன் B.E. ) மூதறிஞர் டாக்டர் சுப்புரெட்டி யார் 'பட்டினத்தடிகள்' பற்றிய ஓர் அருமையான நூலை வரைந் துள்ளார். பதினொராந் திருமுறை யில் சில பிரபந்தங்களை அருளி யுள்ள திருவெண்காட்டிகளையும், 'பட்டினத்தடிகள் பாடல் திரட்டு' என்ற நூலில் காணப்பெறும் பனு வல்களைப் பாடிய அருளாளர் ஒரு வரையும், வேறுசில பாடல்களைத் தந்த பெரியார் ஒருவரையும் பட்டி னத்தார் என்றே தமிழுலகம் வழங்கி வருகிறது. மூவர் வரலாறும் ஒன்றோடொன்று பின் னிப் பிணைந்து பேராசிரியர் ந.சுப்புரெட்டியார் அவர்கள் சொல்வதுபோலப் 'பஞ்சாமிருதமாய்' வழங்குகின்றன. நக்கீ ரர், ஒளவையார், கம்பர் முதலிய பலரும் இந்தச் சிக்கலுக்கு உள்ளானவர்களே! ஆதிசங்கரர் பேரிலும் கதைகள் கட்டப்பட டதும் மற்றவர் பாடிய பாடல்கள் அவர் தலையில் ஏற்றப்பட்ட தும் உண்டு. பேராசிரியர் சுப்புரெட்டியார் பட்டினத்தாரைப் பற்றிய சிக்கலுக்கு ஒரு தெளிவு தரும் நேரத்தில் மூன்றாவது பட்டினத் தார் ஒருவரையும் நமக்கு அறிமுகம் செய்கிறார். நாட்டுக் கோட்டை நகரத்தாரில் பட்டினச்சாமி என்று ஒரு மரபினர் உள்ளனர். அரசர் அண்ணாமலைச் செட்டியார் அம்மர 1. 104, அண்ணாநகர் கிழக்கு, சென்னை - 600 102 தொழிலதிபர் (Mls. Southern Alloy Foundaries (P) Ltd.), gososuń, songsu &#5rāgi, பெருமன்றம், சென்னை - 600 004.