பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பட்டினத்தார் - படைப்புகள் # 53 + யைத் தன்னகத்துக் கொண்டு திகழ்வதை அறிந்து மகிழ் கின்றோம். இத்திருவந்தாதியில் 38 முதல் 44 முடியவுள்ள திருப்பாடல்களில் மாதொரு பாகராகிய அர்த்தநாரீச்சுரர் திருக்கோலத்தியல்பு விரித்துரைக்கப் பெற்றுள்ளது. இறைவன் கோயில் கொண்டுள்ள திருத்தலங்களாக இந்த அந்தாதியில் 69 தலங்கள் குறிக்கப் பெற்றுள்ளன. அவற்றுள் இமயம், கொல்லி, பொதியம், விந்தம், மந்தரம், மகேந்திரம், கருங்குன்றம், வெண்குன்றம், செங்குன்றம், நெடுங்குன்றம், நற்குன்றம், திருவிற் பெரும்பேறு, புலிவலம், வில்வலம், திருக்காரிகரை, திருப்போந்தை, முக்கோணம் என்பவை வைப்புத் தலங்கள் எனக் கொள்ளத்தக்கவை. அகத்துறைப் பாடல்கள். திருவேகம்பப் பெருமா னைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு குடும்ப வாழ்க்கையில் தலைவன் - தலைவி என்பவர்களது அன்பின் திறத்தினைப் புலப்படுத்துவனவாக அமைந்த பல அகத்துறைப் பாடல்கள் இத்திருவந்தாதியில் இடம் பெற்றுள்ளன. இத்திருப்பாடல்கள் திருவாதவூரடிக ளின் திருச்சிற்றம்பலக் கோவையை நினைவுபடுத்துவ னவாக அமைந்துள்ளன எனக் கருதலாம். ஒரு பாடல். உடன் போக்கிய தலைவனொடு சென்ற தலைவியைத் தேடிச் சென்ற செவிலித்தாய் தன் மகளும் அவள் காதலனும் போலவே வழியில் எதிர்ப் பட்ட காதலர்களாகிய அயலார் இருவரைக் கண்டு நூம்மையொத்த அன்பிலராகிய இருவர் இவ்வழியே போகக் கண்டீரோ?’ என வினவுகின்றாள். அது கேட்ட தலைமகன் இறைவன் ஊர்ந்தருளும் ஆனேற்றினை யொத்த ஆற்றல்மிக்க தலைமகனைக் கண்டேன். நும் மால் வினவப் பெற்ற இருவருள் மற்றொருவரை என்னு டன் வரும் மானோக்கியாகிய இம்மங்கையைக்