பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பட்டினத்தார் - படைப்புகள் # 55 + இத்திருப்பாடல்களில் சொல்லோவியம் செய்து காட் டிய திறம் உணர்ந்து மகிழத்தக்கதாகும். எடுத்துக் காட் டுகளாக ஒருசில பாடல்கள்: கார்மிக்க கண்டத்து எழில்திரு வேகம்பர் கச்சியின்வாய் ஏர்மிக்க சேற்றுஎழில் நெல்நடு வோர்ஒலி பொன்மலைபோல் போர்மிக்க செந்நெல் குவிப்போர் ஒலிகருப் பாலையொலி நீர்மிக்க மாக்கட லின்ஒலி யேயொக்கும் நேரிழையே (76) இங்கு நெற்பயிர் நடுவோர் ஒலி, செந்நெல் குவிப்போர் ஒலி, கரும்பாலை ஒலி ஆகியவை பல்வேறு ஒலிகள் நீர்மிக்க பெரிய கடல் ஒலியை ஒக்கும் என்கின்றார் அடிகள். சிறைவண்டு பாடும் கமலக் கிடங்குஇவை செம்பழுக்காய் நிறைகொண்ட பாளைக் கமுகின் பொழில்இவை தீங்களியின் பொறைகொண்ட வாழைப் பொதும்புஉவை புன்சடை ஏகம்பனார் நிறைகொண்ட பூங்கச்சி நாடெங்கும் இவ்வண்ணம் நன்னுதலே (78) இங்கு தாமரைப் பொழில் பாளைக் கழுகின் பொழில் வாழைத் தீங்கனியின் பொழில் என்று பல்வேறு பொழில்கள் காட்டப் பெறுகின்றன. இங்ங்னம் பல காட்சிகள். உடன்போக்கில் தலைவியை உடன் கொண்டு ஏகும் தலைவன் காஞ்சி நகரடைந்து அங்கு உமையம் மையார் வெண்மணல்ால் சிவலிங்கம் அமைத்து இறை