பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பட்டினத்தார் - படைப்புகள் & 57 & இவை உணர்தற்கரிய சைவ சித்தாந்த உண்மைகளைத் தெளிவாக விளக்குவனவாகவும் உள்ளன. உலகமே உருவமாகத் திகழும் இறைவனது பெருந் திரு உருவின் இயல்பினை இப்பனுவலின் 'இருநில மடந்தை எனத் தொடங்கும் முதற்பாடலில் அடிகள் இனிது புலப்படுத்தியுள்ளார். சிவபெருமான் சமயங் கடந்த தனி முதற் பொருளாக விளக்கும் மாட்சியினை இரண்டாவது பாடலில் காணலாம். இடத்துறை மாதரோடு ஈருடம் பென்றும் நடத்தினை நள்ளிருள் நவிற்றினை என்றும் புலியதள் என்பொடு புனைந்தோய் என்றும் பலிதிரி வாழ்க்கை பயின்றோய் என்றும் அருவமும் உருவமும் ஆனாய் என்றும் திருவமர் மாலொடு திசைமுகன் என்றும் உளனே என்றும் இலனே என்றும் தளரான் என்றும் தளர்வோன் என்றும் ஆதி என்றும் அசோகினன் என்றும் பொதியிற் பொலிந்த புராணன் என்றும் இன்னவை முதலாத் தாமறி அளவையின் மன்னிய நூலின் பன்மையுள் மயங்கிப் பிணங்கு மாந்தர் பெற்றிமை நோக்கி அணங்கிய அவ்வவர்க் கவ்வவைஆகி அடையப் பற்றிய பளிங்கு போலும் ஒற்றி மாநகர் உடையோய் உருவே (2) என்ற பாடலில் அம்மாட்சி விரித்துரைக்கப் பெற்றிருத்த லைக் காணலாம். 'திருவொற்றியூரில் எழுந்தருளியுள்ள பெரு மானே, தையல்பாகனாகிய நின்னைத் திருமால் என்றும் நான்முகன் என்றும் அருகன் என்றும் புத்தன் என்றும் பல்வேறு பெயர்களால் சமயவாதிகள் பலர் மாறுபடக் கூறினாலும் யாவர்க்கும் மேலாம் இறைவனாகிய நீ,