பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பட்டினத்தார் - படைப்புகள் 4 67 + கண்துயில் கனவில் கண்ட காட்சி அதனிலும் பொல்லா மாயக் களங்கம் (அடி 30-34) என்றும் கூறி இத்தகைய நிலையற்ற உடலின்மீது பற்று வையாமல், தில்லைக் கூத்தனை நோக்கி, இமய வல்லி வாழிஎன்று ஏத்த ஆனந்தத் தாண்டவம் காட்டி ஆண்டுகொண்டு அருள்கைநின் அருளினுக்கு அழகே (છા 36-38) என்று ஆட்கொள்ளுமாறு வேண்டுகின்றார். மூன்றாம் அகவல்: இறைவனே, இவ்வளவு மாசு பொதிந்த உடலை விட்டு என் உயிர் பிரிந்து வருங் காலத்து நான் உனக்கு அடைக்கலம்’ எனக் கூறுவது. இது 52 அடிகளைக் கொண்டது. எடுத்த எடுப்பில், பாற்கடல் கடையப் படும்கடு வெண்ணெயைத் திருமிடற்று அடக்கிய இறைவநின் அடைக்கலம் (அடி 1-2) என்று பாடல் தொடங்குகின்றது. எட்டு அடிகள் முடிய அடைக்கல ஒலம் நடைபெறுகின்றது. இந்த உடல் பல்வேறு பழிகளைச் சுமந்து கொண் டுள்ள சுமைதாங்கி என்று காட்டுவர். மனவழி அலைந்திடும் கனவெனும் வாழ்க்கையும் விழுப்பொருள் அறியா வழுக்குறு மனனும் ஆணவ மலத்துஉதித்து அளைந்து.அதில் உளைந்திடும் நினவைப் புழுவென நெளிந்திடு சிந்தையும் படிறும் பாவமும் பழிப்புறு நினைப்பும் தவறும் அழுக்காறும் இவறுபொச் சாப்பும் கவடும் பொய்யும் சுவடும் பெருஞ்சினம் இகலும் கொலையும் இழிப்புறு புன்மையும்