உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகா பட்டினப்பாலை பதிப்புரை இவ்வரிய ஆராய்ச்சியும் உரைப்பகுதியும் பாஷாகவிசேகரர் வித்வான் ரா.இராகவையங்கார் தமிழ் ஆராய்ச்சித்துறைத் தலைவராகவும் நான் அவர்க்குதவியாகவும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துப் பணி ஆற்றியபோது எழுதப்பட்டவை. நுண்மாணுழை பலம்வாய்ந்த இப்புலவர் பெருமான், துகாறும் யாரும் கூறாத பல அரிய செய்திகளை இக்கட்டுரையில் வெளியிட்டுள்ளார். சங்க நூல்களை மாத்திரம்கொண்டு ஆராயுங்கால் பொருநராற்றுப்படைத் தலைவன் கரிகாலனாகவும், பட்டினப்பாலைத்தலைவன் திருமாவளவ னாகவும் கொள்ளநேரும் என்றும், இருவரும் ஒருவரல்லர் என்றும், இச்செய்திகள் இவ்விரு நூல்களினுள்ளும் இவ்விருவரைப்பற்றிக் கூறுவனவ வற்றால் நன் விளங்குமென்றும், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனே இத்திருமாவளவன் என்றும், சிலப்பதி காரத்திற் கூறும் செய்திகளை நம்பி நச்சினார்க்கினியர் முதலிய பலரும் பிறழவுணர்ந்தனர் என்றும், சோரேயன்றிச் சோழர் தம் கொடியை இமயத்திற் பொறித்ததாக எட்டுத்தொகையில் யாண்டும் கூறப்படவில்லையென்றும், தாய்வயிற்றிலிருந்து தாயமெய்தியது, எழுவர் மன்னரை வெற்றிகொண்டது, பிறர் பிணியகத்திருந்து மீண்டது முதலிய பல செய்திகள் திருமாவளவற்கேயன்றி, கரிகாலற் கெவ்வகையிலும் பொருந்துவன அல்ல என்றும், பல அரிய அகச் சான்று புறச்சான்றுகள் காட்டி எழுதிய இக்கட்டுரை தமிழ் மக்கட்குப் பெருமகிழ்வை விளைப்பதோடு இன்னும் பல புதிய ராய்ச்சிகட்கும் சிறந்த அடிப்படையாகும் என்பதற்கையமில்லை. உரைப்பகுதியில் நச்சினார்க்கினியர் உரையைச் சில இடங்களில் மறுத்தும், தமது துணிபு கூறியும், ஆசிரியர் வரைந்திருப்பது, அவரது உரை தீட்டும் வன்மையை நன்கு விளக்கும். உரையை எளிதில் அறிந்து மகிழும்படி பட்டினப்பாலை மூலமும் அச்சிடப் பட்டுள்ளது. தமிழ்ப்புலவர்கட்கு இஃது ஓர் அரிய விருந்தாகும் E.S.வரதராஜய்யர் 23-]-51