பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 107

விவாதத்திலிருந்தே விலகிக் கொண்டார். பூரீ வைணவர் ஒருவரும், இப்படிப்பட்ட விவாதத்தில் கலந்து கொள்ள மறுத்து விட்டார். 'ஆண்டாளைக் குறைத்துப் பேசுவது, அதை நான் கேட்டுக் கொண்டிருப்பது எல்லாம் பெரிய பாவம், அந்தப்பாபகாரியத்தை நான் செய்ய மாட்டேன்” -என்று சொல்லிவிட்டார். இந்தச்சூழ்நிலையில்கட்சிக்கு மூன்று பேர் விவாதிக்கக் கிடைத்ததே பெரிய காரியம். இப்படிப்பட்ட மன்றத் தலைமைக்கு ஆள்தேடி இருக்கிறார்கள். விவாதிக்கவே இணங்காத அன்பர்கள் தலைமை தாங்கித் தீர்ப்புக் கூற இணங்குவார்களா? கடைசியாக, 'ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி' - என்று என்னைப் பிடித்துப் போட்டி ருக்கிறார்கள். நானோ சர்வ சமய சமரச வாதி. கொஞ்சம் அதிகமான துணிச்சல் உடையவன். இப்படிப்ப்ட்ட விவாதத்தால், இல்லை இந்த மாதிரி விவாதங்களில் தீர்ப்புக் கூறுவதால், எனக்குள்ள மணிவாசகர் பக்தியோ, இல்லை ஆண்டாள் பக்தியோ குறைந்து விடாது என்று எண்ணுபவன். என் பக்தியைத் தவறாக அன்பர்கள் எடை போட்டுவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையின் பேரிலேதான் இந்த விவாதத்திற்குத் தலைமை வகிக்க இணங்கியிருக்கிறேன்.ஆம், அறிஞர்கள்புகஅஞ்சுகின்ற இடத்தில் அறிவிலிகள் தைரியமாகப் புகுவார்கள் இன்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு.அந்த நிலையிே தோன் இருக்கிறேன் நான் ஒன்று மட்டும் சொல்வேன். இப்படியெல்லாம் விவாதிப்பதன் காரணமாக மக்கள், ஆண்டாளைப் பற்றியும், மாணிக்கவாசகரைப் பற்றியும் தெளிவான எண்ணங்கள் பெறக்கூடும் என்பதை மட்டும் நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேணும்.