பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் ஆய்வு | 203

தமிழகத்தில் பழங்காலம் முதற்கொண்டே அரண் மனைகளிலும் திருக்கோவில்களிலும் பட்டி மண்டபம் எழுந்து திகழ்ந்ததைத் தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன. இதுவரை கண்ட சான்றுகளைக் கொண்டு: பட்டி மண்டபம் என்பது புலமைக் கலை நிகழும் மண்டபம்,

அப்பட்டி மண்டபம் புலமை வழக்காம் சொற்போர் நிகழும் மண்டபமும் ஆயிற்று; காலப்போக்கில், புலமைக்கலை நிகழ்ச்சி அருகிச் சொற்போர் நிகழ்ச்சி பெருகியதால் பிற்காலத்தில் பட்டிமண்டபம் என்பது சொற்போருக்குரியது ஆயிற்று.

இப்பட்டி மண்டபம், அரங்கும் மன்றமும் கூடிய கூட்டமாயினும் அங்கு நிகழும் சொற்போர் நிகழ்ச்சிக்கு ஆகுபெயராகியது.