பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 T பட்டி மண்டப வரலாறு

“அகத்தியர் முதலாகப் பெரும்புலவர்கள் தமிழர்களே. அவர் யாத்த நூல்கள் தமிழர்தம் மரபுகளே வந்த ஆரியர் தமிழக் கருத்துக்களைத் தாம் கொண்டனர்”

என்று தமிழ் நூல்கள், நான்மறை முதலிய பல்வகைச் சான்றுகள் காட்டிப் பேசினார்.

இடையிடையே தலைவர் சிறுசிறு மறுப்பு சொன் னார் . அவை நொறுக்கப்பட்டன . கூட்டத்தில் அமர்ந்த தமிழ் உணர்வுடையோர் அடிகளார் கருத்தை ஏற்றுக் கையொலி செய்து பாராட்டினர் . அவை சுவையொடு சூடு கொண்டது . அவையை இயக்கிய தேவரவர்கள் நடுவ ரானார். தலைவர் உரையையும், பொழிவாளர் உரையை யும் சீர்தூக்கி, தமிழர் தனிப் பெருமை உடையவரே’ என்று தீர்ப்பளித்தார்.

மறுநாள் இத்தீர்ப்பின் விளக்கமாக அடிகளார் “பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்” என்னும் பொருளில் பல்வகைச் சான்றுகளுடன் பேருரையாற்றினார் . இப் பொழிவு பண்டைத் தமிழரும் ஆரியரும்” என்னும் நூலாகப் பின்னர் வெளிவந்தது இப்பதிப்பு மதுரைத் தமிழ்ச் சங்க ஆண்டு விழாக் கருத்துப் போர்த் தீர்ப்பின் பதிவு முத்திரையாயிற்று.

சங்க கால ஆட்சிப் பட்டி மண்டப நோக்கமான கருத்து நிறைவேறி அது சங்கப் புலவர்களால் ஏற்கப்பட்டுச் சங்கத்தில் பதிவான பாங்கை இப்பட்டிமண்டபப் பதிவு நினைவுறுத்துகின்றது.