பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 - பட்டி மண்டப வரலாறு

சீராக நிகழ்ந்தது என்று பதியலாம் . கம்பன் கழகம் முதல் 1960 வரை தமிழகத்தில் பட்டி மண்டபம் ஒரு பொற் காலத்தைக் கண்டது . இஃது உண்மை என்று பதியலாம்.

கவிதைப் பட்டி மண்டபம் (சிவகங்கையில்)

சமயப் பங்கில் இசைப்பட்டி மண்டபமும் கூத்துப் பட்டி மண்டபமும் இடம் கொண்டமை போன்று பிற்காலப் பட்டிமண்டப விளைச்சலில் கவிதைப் பட்டி மண்டபமும், எழுத்துப் பட்டி மண்டபமும் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கவை. r

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக்கல்லூரி வெள்ளிவிழா 11 . 3. 1973 இல் நிகழ்ந்தது. இதில் நிகழ்ந்த கவிதைப் பட்டிமண்டபம், முதன்முதல் நிகழ்ந்ததாகும்.

“தமிழர் வாழ்வில் சிறந்து நிற்பதுகாதலே! வீரமே!

என்பன பாடுபொருள்கள். நடுவர் முனைவர் தமிழண்ணல்

காதலே அணியில் கவிஞர் சொ. செ. மீ சுந்தரம் (தலைவர்) கவிஞர் சி. சுந்தரேசன், கவிஞர் தி கு நடராசன்

விரமே அணியில் கவிஞர் முருகு சுந்தரம் (தலைவர்) கவிஞர் சிங்காரவடிவேலன், கவிஞர் தமிழ்க்குடிமகன் (பின்னர் சட்டப்பேரவைத் தலைவர்)