பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 T பட்டி மண்டப வரலாறு

சான்று இல்லை. ஆனால், இக்கதைத் தொடர்பில் வெப்புநோய் பெற்ற நக்கீரர் முருகன் மேல் திருமுரு காற்றுப்படை பாடி நலம் பெற்றதாக ஒரு கருத்து உலவ விடப்பட்டது.

இக்கால மேலைநாட்டுத் தருக்கக் கலை ஆய்வு, ‘தருக்கமுறைப் புலக்கொள்கை (Logive poritorism) எனப் படுகின்றது. இது 1928இல் தான் தோன்றியது. ஆயினும் ஆய்வில் உண்மை கொள்ளப்பட்டதால் எக்காலத்திற்கும் பொருந் தும் . இதன்படி நிகழ்வுகள்தாம் சொற்றொடர்ப் பொருள்களை உண்மையாக்குபவை , நிகழ்வுகளுடன் பொருந்தாத சொற்றொடர்கள் உண்மையானவை அல்ல’

என்பது தருக்கக் கோட்பாடு.

தொன்மைத் தமிழ்ச் சங்கநூற் பாடல் சொற் றொடர்கள் உண்மைகளின் பதிவுகள் . எனவே, முதல் விளக்கம் பொருந்தும் உண்மை நிகழ்வற்ற புராணக் கதைகள் நிகழ்வுகளின் பதிவல்ல ஆகவே, உண்மையற்ற

கற்பனைகளே.

எனவே, நக்கீரர் தருமி கதையும் இறையனார் . இறைவனார்கதையும் கற்பனையில் எழுந்தகட்டங்களாகும். கற்பனை என்பதற்கு இறையனாரை இறைவனாராகக் கொண்டதே சான்றாகும் இறையனாரை இறைவனாராக அஃதாவது மதுரைக் கடவுள் சொக்கநாதராகக் கொண்டு ‘அவர் பாடிய பாடல்'கொங்குதேர்” பாடல் என்றனர்.