பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 | பட்டி மண்டப வரலாறு

அவையில் பேசுவோர் அவைக்கு அடங்கி வணக்கம் சொல்லுதல் வேண்டும் . இது அவையடக்கியல்’ எனப் பட்டது . தொல்காப்பியர் வகுத்த இந்த அவையடக்கிய லுக்கு உரையாசிரியர் நச்சர்,

“(யான்) அறியாதன சொல்லினும் (அவையோர்) பாகுபடுத்திக்கோடல் வேண்டும் என (அவையிலுள்ள) எல்லா மாந்தர்க்கும் தாழ்ந்து கூறல்” என்றார்.

இவற்றுடன் ஆங்காங்குச் சிதறலாகக் கிடைக்கும் நெறிக் குறிப்புகள் உள்ளன.

பேசுவோர் எழுந்து நின்று பேசுதல் (சிலம்பு ) ஒருவர் பேசும்போது மற்றவர் பேசாமை (நாலடி) இகல் இல்லாதவராக எஃகு போன்ற கருத்து உறுதி கொள்ளுதல் (நாலடி.) அதிரப் பேசாமை (ஆசா) கொச்சைச் சொல்லுக்கு மாற்றாக அவையல் கிளவி சொல்லுதல் (தொல் ) அவைக்கேற்ற வரையறை கொள்ளுதல் (பழ.) முடிவுக்கு வந்த கருத்தை ஏற்றுக்கொள்ளல் (அவிநயம், தலைமைக்குக் கட்டுப்படல் (நாலடி.) மகிழ்ச்சியான ஆரவாரக் குறிப்புகள் (மது) பாராட்டல் (பழ ) நன்றி கூறல் (திருக்குறள்)

இவையும் பட்டி மண்டப அவை நெறிப் பண்புகளாகும்.