பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 T பட்டி மண்டப வரலாறு,

ஒரே நேரத்தில் ஒரே கருத்தைப் பேசுதல் ஒரு நாயைக் கொண்டு இருவர் வேட்டையாடுவதை ஒக்கும் என்று பழமொழி (19) காட்டிற்று.

முன்கண்ட அவைய முல்லை விளக்கத்தில் தொடை விடை - வினா விடை முறையாக, தொடை விடைதுள்ளி’ என்று மீண்டும் மீண்டும் வினாவும் விடையுமாகப் பேசுவதைக் குறிக்கப்படுகிறது. எனவே, ஒரு கருத்தை முன்வைக்க, அதை மற்றவர் மறுக்க, மறுத்து வினவ, முன்வைத்தவர் விடை சொல்ல இவ்வாறு மாறி மாறிக் கருத்துப் போரிட்டதை அறியலாம்.

இவ்வாறு மாறுபட்டுப் பேசுவதைக் குறிக்க வாதம்’ என்னும் சொல் தமிழில் புகுந்தது. இவ்வாதத்தை முன்வைப்பவன் வாதி எனப்பட்டான்.

வாதி என்னும் சொல் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. கருத்துப் போரிடுபவன் பேசும் போது கையை உயர்த்தி நான்கு விரல்களை இரண்டிரண்டாக ஒட்டிவைத்து நிமிர்த்திப் பேசியுள்ளான் இந்த நிமிர்ந்த இருவிரல் காட்சியை வரகுக்கதிர்க்கு உவமையாக்கினார் பெருங்கெளசிகனார் என்னும் புலவர்.

வாதி கையன்ன கவைக்கதிர் இறைஞ்சி” என்றார் . இதனை விளக்கும் நச்சர்,

‘தருக்கம் கூறுகின்றவன் கையிடத்து இணைந்த விரல்களை யொத்த இரட்டித்த கதிர்கள்” என்றார்.