பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 பட்டி மண்டப வரலாறு

இவ்வாறு கருத்துகளின் வழிப்பட்டுத் தீர்ப்புக் கூறு வதே வல்லமையான பட்டிமண்டபத் தீர்ப்பு ஆகும். 43

இக்கருத்து பழம்பாடற் கருத்து.

(10) பின் விளைவு

பட்டி மண்டபத்தின் காலத் தொடக்கமாக “மன்னிய அவையிடை வெல்லுறுதல் பட்டி மண்டப நிகழ்ச்சியின் ஊற்றுக்கண் எனப்பட்டது.

இவ்வூற்றுக் கண்ணின் நாற்றங்காலாய்ச் சங்க இலக்கிய, தொல்காப்பியக் குறிப்புகள் அமைந்தன.

இந்நாற்றங்காலில் பயிராகி விளைந்த விளைச்சல் தான் இங்குப் பின் விளைவு எனப்படுகின்றது.

சங்கப் பாங்கின்படி,

பட்டி மண்டபத் தீர்ப்பில் உறுதியான கருத்தை கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மை” என்றபடி எதிர்த்துப் போரிட்டவர் ஏற்கும் பெருந்தன்மை முதல் விளைச்சல் ,

தீர்ப்பில் முடிவான கருத்து, புலவர் வழக்காதல், முதல் விளைச்சலின் அறுவடை .

அறுவடையாம் புலவர் வழக்கு, நூல்களில் ஆளப்பட்டு நூல் வழக்காதல் மணிக்கதிர்.