பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ) பட்டி மண்டபத்தில் சமயப் பங்கு

பிணங்கும் சமயங்கள்

‘வணங்கும் துறைகள் பலபல ஆக்கி மதிவிகற்பால்

,45

பிணங்கும் சமயம் பலபல ஆக்கி - என்கிறது நம்மாழ்வாரின் திருவிருத்தம் இதில் சமயம் பிணக்கம் கொள்வது, அப்பிணக்கம் அறிவுத்திரிபால் நேரும் என்றது ஒரு சமயச் சான்றோரின் வாய்மொழி அறிவு திரிந்த பிணக்கத்தால் சமயங்கள் தமக்குள் பலவகைகளில் மோதிக்கொள்ளும் அம்மோதல்களில் வலுவான மோதல் பட்டிமண்டபச் சொற்போர் வாதம், வாதி என்னும் வடசொற்கள் தமிழில் புகுந்து முன்னிருந்த பட்டிமண்டடத்தைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லைத் தடந்தெரியாமற் செய்து முழு ஆட்சிபெற்றுள்ளன.

இவ்வாறு பிணக்கால் சமயச் சொற்போரிடும் சமயங் களையும் நம்மாழ்வாரே,

இலிங்கத் திட்ட புராணத்திரும் (சைவரும்)

சமணரும் சாக்கியரும் (பு த்தரும்) -

வலிந்து வாது செய் i ர்களும்”

என்று மூன்று சமயமாகிய சமயத்தாரைக் குறித்தார். நம்மாழ்வாரின் சமயமாகிய திருமாலியமும் (வைணவமும்)