பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏற்படுத்தப்பட்டன, சில இடங்களில் நிலங்களும் கொடுக்கப்பட்டன. (தொகுதி : 1-80-81).

நிகழ்ச்சிகள் இப்படி இருக்க, சாதிபேதமற்ற திராவிடர் மகாஜன சபை மூலம் காங்கிரஸ்-க்கு பண்டிதர் கொடுத்த விண்ணப்பம் என்ன வானது? காங்கிரஸ் 17 ஆண்டுகளாகியும் அதற்கு பதில் சொல்லவில்லை, என்று பண்டிதர் 14, அக்டோபர் 1908 அன்று குறிப்பிட்டாலும், அவரது மறைவு வரை அம்மனுவுக்கு பதிலேதும் காங்கிரஸ் எழுதவில்லை.

எனினும் இந்த வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டு நாம் என்ன முடிவுக்கு வரமுடியும்? இதில் இரண்டு கேள்விகள் எதிர்ப்படுகின்றன.

1. பண்டிதர் ஏன் அரசிடம் நேரிடையாக கோரிக்கைகளைக் கொடுக்காமல் காங்கிரஸுக்கும், சென்னை மகாஜன சபைக்கும் அனுப்பினார்?

2. அவர் கோரிக்கைகளின் முக்கியத்துவம் என்ன? முதல் கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.

1885ல் பம்பாயில் நடந்த காங்கிரஸின் முதல் கூட்டத்தில் கலந்து கொண்ட மொத்தப் பிரதிநிதிகள் 72 பேர் மட்டுமே. இது காங்கிரசின் பலவீனத்தைக் காட்டுவதாகத் தோன்றினாலும், படித்தவர்களும் பணமுள்ளவர்களும் 1887ல் உள்ளாட்சி அமைப்புகளில் நிறைந்திருந் தார்கள். இவர்கள் காங்கிரஸ் பக்கம் திரும்புவார்கள் என பிரிட்டிஷ் அரசு எதிர்பார்த்ததோடு அவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்ய நினைத்தது. எனவே அன்றைக்கு இருந்த வைஸ்ராய் டஃப்ரின் பிரபு படித்த வர்க்கத்தினருக்கு சலுகைகள் அளிப்பதின் மூலம் நிர்வாகத்தை சீர்பட நடத்த முடியும் என நம்பினார். பம்பாயின் கவர்னராயிருந்த ரேய் பிரபு அன்பிற்குரிய "நடுநிலைவாதிகள்" என்று காங்கிரசை வர்ணித்தார். எனினும் காங்கிரஸ் மீது அரசுக்கு அதிருப்தி இல்லாமலில்லை, 1888 நவம்பர் 30ம் தேதி வைஸ்ராய் டஃப்ரின், பேசும்போது "காங்கிரஸ் ஒரு நுண் சிறுபான்மை" என வர்ணித்தார். டஃப்ரினை தொடர்ந்து வைஸ் ராயாக பொறுப்பேற்ற லான்ஸ்வோன் பிரபு (1888-1893) காங்கிரசை "விநோதமான ஒரு நல்ல நகைச்சுவை" என்று குறிப்பிட்டிருந்ததோடும் காங்கிரசை சமாளித்துவிட முடியும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

இந்த கருத்துக்கள் விளக்குவது என்னவெனில் காங்கிரஸ் மீது

அரசின் கவனம் இருந்துகொண்டு இருக்கிறது என்பதுதான். அதனால் காங்கிரஸ் எதாவது ஒரு கோரிக்கையை முன்வைக்குமானால் அது

19 / பண்டிதரின் .... சமூகநீதிக் கொள்கை