பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


9

மீளும் மணிமுடி

பண்டிதர் இந்த வரலாற்று காட்சிகளிலிருந்து மறைக்கப்பட்டதற்கு என்ன காரணம்? தமிழகத்தில் நூற்றுக்கணக்கான முற்போக்கு தலைவர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள், மேதாவிகள் இருந்திருக்கிறார்கள், 1907-1914 வரை வெளிப்படையாக இதழ் நடத்தி பல நாடுகளில் தன்னுடைய இயக்கத்தையும் தோழர்களையும் கொண்டிருந்து பல எதிர்ப் புகளை சமாளித்து கலகம் செய்து வந்த பண்டிதர், இவர்களின் கண்களுக்கு மட்டும் தெரியாமல் போன மாயம் புரியவில்லை என்று சொல்ல முடியாது.

பிளேட்டோ சொன்னது போல உண்மையான தத்துவ ஞானியைப் போல அரசியல் மேதைமையும், ஞானமும் ஒருங்கே வாய்த்தவர் அயோத்திதாச பண்டிதர். இந்த நாடு மாட்சிமை பெற வேண்டுமானால் தத்துவ ஞானிகளை ஒருவேளை இந்த சாதி இந்துக்கள் அறியணை ஏற்றி அழகு பார்க்கலாம். ஆனால், எல்லாம் இருந்தும், ஒரு தீண்டப் படாதவனாகப் பிறந்து விட்டதால், தென் இந்திய சமூக சீர்திருத்தத்திற்கு ஒளியேற்றி தொடங்கி வைத்த பண்டிதரை புறக்கணித்தது. அவரைப் புறக்கணித்ததே தவிர அவரது கொள்கைகளைப் புறக்கணிக்கவில்லை, அதை தனக்குள் செரித்து தன்னை வளமாக்கிக் கொண்டதன் மூலம் அக் கொள்கைக்கு நிலைத்த தன்மையை வழங்கிவிட்டது. ஆனால் ஒடுக்கப் பட்ட மக்களின் நலன் சார்ந்த கோரிக்கைகள் சொத்து படைத்த வர்க்கத்தின் கோரிக்கைகளாக மாறிப் போனதுதான் வரலாற்றின் விந்தை, அதுவும் ஒரு முரண் விந்தை எனினும், எப்படி பார்த்தாலும், இட ஒதுக்கீடு, விகி தாச்சார உரிமை எனும் சமூக நீதியின் கொள்கையை வழங்கிய க. அயோத்திதாச பண்டிதர் அவர் தரித்த சமூக நீதி முடியை மற்றவர்கள் பிடுங்கிக் கொண்டிருந்தாலும்

73 / பண்டிதரின்.... சமூகநீதிக் கொள்கை