பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 117 துறைகளைக் கூறுகிறது எனக் கூறிப் பிழை புரிந்துள்ளார் ஆசிரியர் நச்சினார்க்கினியர். `. இயங்கு படை அரவம் வளம் குறைந்த நாடாளும் தன் ஆட்சிக் கீழ், வளம் மிக்க தன் அண்டை நாடும் வந்துறுமாயின், நாட்டு மக்கள் வறுமைத் துயர் ஒழிந்து வாழ்வர்; நாட்டில் அமைதி நிலவும் என்ற உணர்வு, உள்ளத்தில் உருப்பெற்ற அன்று தொட்டே, அவ்வரசன், அவ்வண்டை நாட்டைத் தனதாக்கிக் கொள்வதற்கான வழி வகைகளை மேற்கொண்டிருப்பன்; அதற்கேற்ற வகையில் தன் நாற்படையைப் பெருக்கிப் பயிற்சி அளித்திருப்பன்; அதற்கு வேண்டும் துணைப் படை களையும் தேடிப் பெற்றிருப்பன்; அப்பகை நாட்டின் எந்தப் பகுதியை எந்தக் காலத்தில் தாக்கினால் வெற்றி எளிதாகும் என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்திருப்பன்; இவ்வாறு தன் வலி, மாற்றான் வலி, தனக்கும் அவனுக்கும் துணையாவார் வலி, அவனுக்கு ஆம் காலம், தனக்கு ஆம் காலம், அவனுக்கு ஏற்புடைய இடம், தனக்கு ஏற்புடைய இடம் ஆகிய இவை அனைத்தையும் அவ்வண்டை நாட்டான் அறியா வகையில் ஆராய்ந்து பார்த்து, அவனினும் மிக்க ஆற்றல் உடையனாகித் தனக்கு ஏற்புடைய காலத்தில், தனக்கு வாய்ப்புடைய இடத்தில் அந்நாட்டின் மீது போர் தொடுத்துப் புகுவன்; இந்நிகழ்ச்சிகளைக் கூறுவதே "வஞ்சி அரவம்." இவ்வாறு ஒரு குறிபெறும் வஞ்சி அரவத்தையே, வஞ்சி அரவம், குடைநிலை, வாள் நிலை, கொற்றவை நிலை எனப் பல வகையாகப் பிரித்து உரைத்தார்கள், பு.வெ. மாலையார் போலும் பிற்காலப் புதுப்பொருள் ஆசிரியர்கள். ஒரு நாட்டின் மீது ஆசை கொண்டு, அதைக் கைப்பற்றக் கருதிய