பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 புலவர் கா. கோவிந்தன் பெறத், தான் துணைபுரிதல் வேண்டும் என்று எண்ணாமல், அவர்கள் அறிவின்மையைப் பயன் கொண்டு, அவர்களை ஏமாற்றிப் பிழைக்க எண்ணிய காரணத்தால், அவ்வாறு எண்ணிய காலத்தில் உருப்பெற்றது போர். இயற்கையிலேயே, சிறிது மிக்க வலிவு பெற்ற ஒருவன், வலிவு குறைந்து தன்னோடு வாழும் பிறரைப் பாதுகாத்தல் தன்கடன் என்று கொள்வதற்குமாறாக, அவர் தம் வலிவற்ற நிலையையும் தன் வன்மையையும் பயன் கொண்டு அம் மிகப் பலரை அத்தனி யொருவன் ஆட்டிப் படைக்கத் தொடங்கிய அத்தொல்லுழிக் காலத்தில் தோற்றம் கொண்டது இப்போர். வாழ்வின் மேட்டிலே இருக்கும் ஒருவன், அதன் பள்ளத்தில் இருப்போனும், தன்னோடு மேனிலைக்கு வருவானாக என்ற நல்லெண்ணம் கொண்டு கை கொடுத்துத் துக்கி விடுவதற்குப் பதிலாக, அவன் மீது கல்லையும் மண்ணையும் வீசி அப்பள்ளத்திலேயே அவனுக்கும் கல்லறை காணத் தொடங்கிய காரணத்தால், அக்காலத்தில் தோன்றிற்று இப்போர். தொடக்கத்தில் இவ்வாறு தோற்றங் கொண்ட போரை, அப்போர்க்காம் அடிப்படைக் காரணம் கருதி நான்கு வகையாகப் பகுத்து விளக்கியுள்ளார், தமிழ் மக்களின் வாழ்வியற் படங்களை வரைந்து காட்டும் உயிர் ஒவியப் புலவர்ாம் ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பிய னார். அவை வெட்சிப் போர்; வஞ்சிப் போர்; உழிஞைப் போர்;தும்பைப் போர். தமிழகம், ஆங்காங்குப் பெற்றிருக்கும் இயற்கை. நிலைகளுக்கு ஏற்ப, குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என ஐவகை நிலவளம் உடையதாகப் பிரிக்கப்