பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 இ. புலவர் கா. கோவிந்தன் பழையன் உரிமை களிறின் மயிர்கொண்டு திரித்த கயிற்றினால் பிணித்துப் பழையன் பட்டத்து யானைகளைக் கொண்டே ஈர்த்துச் சென்ற செங்குட்டுவன் செயல் இத்துறைக்குச் சாலப் பொருந்தும். "நுண்கொடி உழிஞை வெல்போர் அறுகை சேணன் ஆயினும்கேள் என மொழிந்து புலம்பெயர்ந்து ஒளித்த களையாப் பூசற்கு அரண் கடாவுறிஇ அணங்கு நிகழ்ந்தன்ன மோகூர் மன்னன் முரசம் கொண்டு நெடுமொழி பணித்து அவன்வேம்பு முதல் தடிந்து முரசுசெய முரச்சிக் களிறுபல பூட்டி ஒழுகை உய்த் தோய்!” -பதிற்றுப்பத்து 44. . தன் வேந்தன் மாண்ட பின்னர்த் தான் இருந்து உயிர் வாழ்தல் தகாது என்பதால், ஒரு வீரன் தன் உயிரையும் மாய்த்துக் கொள்ளத் துணிந்து, தன் வேந்தன் மறைவிற்குக் காரணமாயிருந்தாரோடு தனித்துப் போராடி உயிர் துறக்கும் நிலையும் முன்னர்க் கூறிய நிலையோடு ஒப்புடையதாகலின், "தம் இறைவன் விசும்பு அடைந்தென, வெம்முரணான் உயிர்வேட்டன்று,” என்ற விளக்கம் உடையதாகப் புவெ. மாலையார் கூறும் தன்னை வேட்டல் எனும் துறையும் இதன் பாற்பட்டதே எனக் கொள்க. நூழில்: . தன் வேந்தன் வீழ்ந்துவிட்டான் என்ற செய்தி கேட்ட அவ்வேந்தன் படைத் தலைவன் ஒருவன், அவ்வேந்தன் பால் கொண்ட பெருங்காதலால், அத்தகையானைக் கொன்ற பகைவர் மீது பெருஞ்சினங் கொண்டமையால், தன் வேந்தன் திறத்துத் தான் ஒருவன் மட்டுமே உளன்