பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 இ. புலவர் கா. கோவிந்தன் அம்மா எயிற்றி" (பு.வெ.மா. 1213) எனப் பாலை நிலத்துப் பெண்ணாகிய எயிற்றியே கூறப்பட்டுள்ளாள். இதுவே பொருளாக வரும் "இளமா எயிற்றி! இவைகாண் நின்ஐயர் தலை நாள் வேட்டகத்துத் தந்த நல் ஆனிரைகள்” (சிலம்பு. வேட்டுவவரி) என்ற சிலப்பதிகாரத் தொடரிலும் பாலை நிலத்துப் பெண்ணின் பெயரே இடம் பெற்றிருப்பது காண்க. ஆக, வெட்சி வீரர் பாலை நிலத்திற்கு உரியவராவர் என்பது இவற்றாலும் உறுதியாதல் உணர்க. நிரை கோடல் ஒழுக்கத்தினைப், பாலை நிலத்து மறவர் மேற் கொண்டது ஏன் ? நிலப் பகுதி, நான்கு வகையாகவும், ஐந்து வகையாகவும் பகுக்கப் பெறும் எனினும், அவற்றுள் குறிஞ்சி என அழைக்கப் பெறும் மலைநிலமே முதற்கண் தோன்றிய நிலமாம். "கல் தோன்றி மண் தோன்றாக் காலம்" (பு.வெ.மா. 35) எனக் கூறுவது காண்க. நிலங்களுள் குறிஞ்சி நிலமே முதற்கண் தோன்றிய நிலமாதலைப் போன்றே, மக்கள் முதற்கண் வாழத் தொடங்கிய இடமும் அம்மலை நாடேயாம். முதற்கண் தோன்றிய நிலத்தில், மக்கள் தம் வாழ்க்கையினைத் தொடங்குவதும் பொருந்தும் அன்றோ? தம் வாழ்க்கை யினை, மக்கள் ஆண்டுத் தொடங்கியதற்கு, அதுவே முதற்கண் தோன்றிய நிலமாம் என்பதினும் அம்மக்கட்கு வேண்டும் உணவுப் பொருள்கள் அனைத்தையும், அன்னார் உழைப்பினை எதிர் நோக்காமலே அளித்தது அது என்பதே பொருந்தும் காரணமாம். மக்கள் முயற்சி யில்லாமலே பெறலாம் காயும் கனியும் கிழங்கும் ஆண்டு நிறையக் கிடைத்தன. உண்ணுநீர்ச் சுனைகளும் ஆங்கே இருந்தன. காயும், கனியும், கிழங்கும் அருகிய காலத்தில், தன்னகத்தே வாழும் மக்கட்கு உணவாகிப் பயனளிக்கும்