பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 இல் புலவர் கா. கோவிந்தன் அகத்தோன் மார்பில் மணக்கும் ஆத்தி மாலைக்கு உரியோராகிய சோழர் குலத்தவர்க்குப் பகைவராகிய பாண்டியர்க்கு உரிய வேப்பமாலை மணக்குமோ, அல்லது, அச்சோழர்க்குரிய பிறிதொரு பகைவராகிய சேரர்க்குரிய பனந்தோட்டு மாலை ஒளி வீசுமோ என்ற ஐயப் பாட்டுணர்வோடு ஊன்றி நோக்கிய யான் வியந்தே போனேன்; உன் மார்பில் வேப்பந்தாரும் இல்லை; பனந்தோட்டு மாலையும் பளபளக்கவில்லை; மாறாகச், சோழர் குடிக்கு உரியதும், உன்னால் பகைக்கப்பட்டு. இவ்வரணகத்தே அடைப்புண்டு கிடப்போன் கழுத்தில் கண்டு வந்ததுமாகிய ஆத்திப்பூ மாலையே அணி செய்து கிடக்கிறது! ஆக நீங்கள் இருவருமே சோழர் குலத்தவர் என்பதை அறிந்தேன்; ஆக, அடைத்து நிற்போனும் சோழன்; வளைத்து நிற்கும் நீயும் ஒரு சோழனே; நலங்கிள்ளி, பகைத்து நிற்கும் இருவரும் எவ்வளவுதான் ஆற்றல் மிகுந்தவராயினும், இறுதியில் ஒருவர் வெல்லப், பிறிதொருவர் தோற்றே தீர்வர்; உங்கள் இருவரில் யார் தோற்பினும், தோற்றவன் ஒரு சோழன் என்றே ஊரும் உலகமும் கூறும்; நலங்கிள்ளி, பிறந்த சோழர் குடிக்குப் பெருமை தேடித்தர வேண்டும்; அதற்கு ஒரு பேரரசு அமைக்க வேண்டும் என்ற ஆர்வ மிகுதியால், நீ மேற் கொண்டிருக்கும் இம்முற்றுகை, நீ பிறந்த குடிக்குப் பெருமை தேடித் தருவதற்கு மாறாக, மறையா நெடும் பழியைக் கொண்டு தருவதை, ஆர்வத்தால் நீ அறிந்திலை; அரசே! உன் செயலால் குடிப் புகழ் குன்றும்; ஆகவே இம் முற்றுகையைக் கைவிடுக!” எனப் புகழ் பெருக வழி கூறுவார் போல் போர் ஒழியப் பொருள் மொழி வழங்கினார். .