உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பண்பாட்டு அசைவுகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முன்னுரையும் பின்னுரையும் 'தெய்வங்களும் சமூக மரபுகளும்' 1995இலும் (என்.சி.பி.எச். வெளியீடு) 'அறியப்படாத தமிழகம்' 1997யிலும் (ஜெயா பதிப்பகம்) வெளிவந்தன. அவை ஒரு நூலாகத் தொகுக்கப்பட்டு, சிலபுதிய சேர்க்கைகளோடு இப்பொழுது வெளியாகிறது. இவற்றுள் முதல் நூல் தமிழ்ச் சமூகத்தின் அசைவியக்கத்தில் தெய்வங்களும், சடங்குகளும், வாழ்வியல் கோட்பாடுகளும் பெற்றிருந்த இடத்தை ஓரளவு மதிப்பிட முயல்வதாகும். அந்த நூலைவிடப் பேராசிரியர் ந. முத்துமோகன் அதற்கு எழுதிய முன்னுரை மிகப் பயனுடையது. நூலைப் படித்து முடித்தபின் அந்த முன்னுரையைப் படித்தால் வாசகர்க்குத் தமிழ்ச் சமூக வரலாற்றின் இருண்ட சில பக்கங்களை வாசிக்கப் போதிய வெளிச்சம் கிட்டும். பெருந்தெய்வம்,சிறுதெய்வம் என்ற வரையறையினை அந்த நூல் தகர்க்க முயன்றது. 'அடிக்கட்டுமானம் X மேற்கட்டுமானம்' என்பவை தமிழுலக ஆய்வாளர்களால் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்பதே அந்த நூலின் வழியாக முன்வைக்கப்பட்ட செய்தி. வாசித்தவர்களுக்கு அந்தச் செய்தி எந்த அளவுக்குச் சென்று சேர்ந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. அறியப்படாத தமிழக'த்தை வாசித்த நண்பர்கள் மகிழ்ச்சியினால் விரிந்த கண்களோடு என்னிடம் பேசினார்கள். இயக்கச் சார்பும் சிற்றிதழ் வாசிப்புப் பயிற்சியும் உடைய நண்பர்களிடத்தில் அந்த நூல் உண்டாக்கிய மகிழ்ச்சி எனக்குப் புதுமையாகத் தோன்றியது.

.9.