பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கைகள் 147

சுவர்களாக-முள்வேலிகளாக-அமைந்துள்ளன. இந்த இன்ப நாட்டம் தடுக்கப் பெறுங்கால் அது மறைந்து விடுவதில்லை. அது நனவுநிலையிலிருந்து நனவடிநிலையையும் தாண்டி நனவிலி நிலைக்குச் சென்று விடுகின்றது. இவ்வாறு பலதடைப்பட்ட ஆசைகளால் உருவானதுதான் ஆழ்மனம் அல்லது நனவிலி மனம் என்பது. சில ஆசைகள் தவறானவை என்ற சமூகக் காரணங்களால் நிறைவேறாமற் போனால் இவை ஆழ்மனத்திற்குள் சென்று புதைந்து விடும். அமயம் நேரிடுங்கால் இவை நனவுநிலைக்கும் தெரியாமல் “மாறுவேடத்தில் வெளிப்படும். இவ்வாறு நனவுநிலைக்கும் நனவிலி நிலைக்கும் ஒரு போராட்டமே நிகழும்.

"இட் உணர்வு ஓர் இடையறா வெள்ளம் போன்றது. அது தடைபடுவதால்தான் "ஆழ் உணர்வு” ஏற்படக் காரணமாகின்றது. ஆழ் உணர்வுக்கும் (நனவிலி நிலைக்கும்) நனவுநிலைக்கும் இடையில் செயற்படும் உணர்வுநிலை ஒரு தடைநிலையம் (Check-post) போல் செயற்படுகின்றது. இதன் தடையால்தான் தடைப்பட்ட உணர்ச்சிகள் நனவுநிலைக்கு வரமுடிவதில்லை. இத்தடை சற்று ஒய்ந்திருக்கும்பொழுது அடக்கப் பெற்ற உணர்ச்சி தலைகாட்டுகின்றது; வெளியேயும் வருகின்றது.

நனவுநிலையில் நாம் காரணமறியாமல் செயற்படுவது போலவே, கனவிலும் கூட அங்ங்னமே பல நிகழ்ச்சிகள் தோன்றுவதைக் காணலாம். விழித்திருக்கும் நிலையில் நனைவிலி நிலையிலிருந்து - ஆழ்மனத்திலிருந்து - அடக்கப் பெற்ற உணர்ச்சி வெளியாவது போலவே உறக்க நிலையில் கனவிலும் வெளிப்படுத்துவதே இங்ங்னம் நிகழ்வதற்குக் காரணமாகும்.

நனவிலியுளமே நமது முழு அநுபவமும் வீற்றிருக்கும் மூல பண்டாரமாகும். இந்த உலகில் நாம் பல்வேறு வெப்ப நிலைகள், காற்று நிலைகள், பொழுது நிலைகள் முதலிய