பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகோதர வாஞ்சை 37

என்று அரசன் ஆணையை வழங்குகின்றாள். இதனைக் கேட்கும் இராமனின் முகம் அப்பொழுது அவர்ந்த செந்தாமரையினை வென்றது என்கின்றான் கவிஞன். இராமன் இறுத்த மறுமொழி:

மன்னவன் பணியன் றாகின்

தும்பணி மறுப்ப னோ ?என் பின்னவன் பெற்ற செல்வம்

அடியன்ேன் பெற்ற தன்றோ?" என்பது. இந்த அடிகளில் சகோதர வாஞ்சை பளிச்செனத் தென்படுகின்றதைக் கண்டு மகிழ்கின்றோம்.

பாராள வேண்டியவன் கானாள நேர்ந்ததைக் கேட்ட நகர மக்கள் வருந்தியதைக் கவிஞன் அற்புதமாகக் காட்டுகின்றான். அவர்களுள் சிலர், ஐயா இளங்கோவே !

ஆற்றுதியோ? என்று கூறுகின்றார்கள். இதில் கொண்டிருந்த சகோதர வாஞ்சை தென்படுகின்றது.

இலக்குவனின் சகோதர வாஞ்சை தன் பெரியன்னை தனக்கு ஒருகாலத்தில் அளிக்கப் பெற்ற வரத்தினால் தன் அண்ணனுக்கு வரவேண்டிய அரசினைத் திருப்பிக் கொண்டாள் என்ற செய்தி இலக்குவனுக்கு எட்டுகின்றது. சகோதர வாஞ்சை சினத்தியாக வடிவெடுக்கின்றது.

மூட்டாத காலக் கடைத்தியூென

மூண்டு எழுந்தான் என அத்தீயை நமக்குக் காட்டுகின்றான் கவிஞன். கண்களினின்றும் தீப்பொறி தெறிக்கவும், புருவத்தின்

6. மேற்படி - 110. 7. அயோத். நகர் நீங்கு - 108. 8. மேற்படி - 115.