பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

என்றுமே அதிகம் பேசாத சத்துருக்கனன் பேசும்போது அவனிடம் உணர்ச்சி வெள்ளம் பொங்கிவழிவதைக் காண்கின்றோம். உணர்ச்சிப் பெருக்கிலும் கோபத்திலும் நேர்மையிலும் எள்ளளவும் இலக்குவனுக்குக் குறைந்தவன் அல்லன் சத்துருக்கனன் என்பதைக் காண்கின்றோம். தியாகச் சுடரான சுபத்திரை பெற்றெடுத்த இரண்டு மணிகளும் ஒப்பற்றவர்களாகத் திகழ்வதைப் பார்க்கின்றோம். பேசுகின்றான் கடைக்குட்டி

கானாள நிலமகளைக் கைவிட்டுப்

போனானைக் காத்துப் பின்பு போனானும் ஒருதம்பி, போனவர்கள்

வரும்அவதி போயிற்று என்று ஆனாத உயிர்விடஎன்று அமைவானும்

ஒருதம்பி, அயலே காணாது யானாம்.இவ் அரசாள்வென்; என்னேஇவ்

அரசாட்சி இனிதே அம்மா ?

தனக்கு நேர்ந்த கொடுமையினை வியக்கின்றான். தான் மட்டிலும் நெறிதிறம்பாத் தன் மெய்யை நிற்பதாக்கி இறந்தான்-தன் குடிவழியில் வரவில்லையா? என்று அவன் மனம் துடித்து நிற்கின்றது. நான்கு சகோதரர்களும் ஒருவருவருக்கொருவர் சகோதர வாஞ்சையில் தாழ்ந்தவர்கள் அல்லர் என்ற உண்மையினைச் சத்துருக்கனனும் நினைவுகூர்கின்றான்.

வேறு மூன்று சகோதரர்கள்: வேடர் குலத்தில் குகனும், வானரர்குலத்தில் சுக்கிரீவனும், இராமனுக்குச் சகோதரர்களாக அமைகின்றனர். இதனைச் சந்தர்ப்பங் களுடன் காட்டுவேன்.

இராமன் கங்கைக் கரையிலிருந்தபோது குகன் இராமனைத் தொடர்வதாகக் கூற, அவனை சமாதானப்

33. யுத்த - மீட்சி -223