பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்ம புராணம் 71 என்று அறிந்து கொள்ளும் அறிவை இழந்து தொடக் கூடாத இந்தப் பூக்களை எடுத்துச் சிவனுக்கு அர்ச்சிக்கத் துவங்கினான். சிவனுக்கு ஆகாத இந்தப் பூக்களை அர்ச்சித்த வுடன் பார்வதி தோன்றித் தன் சூலாயுதத்தால் விகுண்டனைக் கொன்று விட்டாள். தந்தை குஞ்சலாவின் கதை ஆலமரத்தினடியில் அமர்ந்திருந்த சாயவனன், இக் கிளிகளுக்குள் நடந்த உரையாடலைக் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போய் தந்தைக் கிளியாகிய குஞ்சலாவைப் பார்த்து, நீ யார்? எப்படி இவ்வளவு விஷயங்களை அறிந்திருக்கிறாய் என்று கேட்டவுடன் குஞ்சலா தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தது. வித்யாதரன் என்ற பிராமணன் வாசு சர்மா, நாம சர்மா, தர்ம சர்மா என்ற தன் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தான். முதலிரண்டு பிள்ளைகளும் தந்தையின் அடிச் சுவட்டைப் பின்பற்றி சாத்திரங்களைப் படித்தனர். ஆனால் மூன்றாவது பிள்ளையாகிய தர்ம சர்மாவிற்கு இதில் நாட்டம் செல்லவில்லை. சோம்பேறியாகவே பொழுதைக் கழித்து விட்டான். நாளாவட்டத்தில் மக்கள் அவனை வெறுக்கத் தொடங்கினர். மக்களின் வெறுப்புணர்ச்சி ஒரு எல்லையைக் கடந்ததால் மனம் நொந்து போன தர்ம சர்மா எப்படியாவது கல்வி கற்க வேண்டுமென நினைத்து ஒரு தக்க ஆசிரியரைத் தேடி அலைந்தான். நல்லாசிரியர் கிடைக்கவே தர்ம சாத்திரங் களைக் கற்றுக் கொண்டான். அப்பொழுது ஒரு வேடன் ஒரு கிளியைப் பிடித்துக்கொண்டு வந்து தர்ம சர்மாவிடம் கொடுத்தான். அன்பு செலுத்த யாரும் இல்லாத நிலையில் இருந்த தர்ம சர்மா, தன் அன்பு முழுவதையும் அக்கிளியிடம்