பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விஷ்ணு புராணம் 117 விஷ்ணுவே பல அவதாரங்கள் எடுத்து பூமியைக் காப்பாற்றி g ..GIF@#fffff". பிரம்மன் முதலிய தேவர்களின் பிரார்த்தனையைக் கேட்ட விஷ்ணு அவர்கள் எதிரே வந்தார். தன் தலையிலிருந்து இரண்டு முடிகளை எடுத்துக் கீழே போட்டு, 'இரண்டும் பூமியில் தீங்கு செய்பவர்களை அழிக்கும். நானே தேவகியின் எட்டாவது மைந்தனாகப் பிறக்கப் போகிறேன் கவலை வேண்டாம் என்று சொன்னார். அசரீரிக்கு பயந்த கம்ஸன் வசுதேவனையும், தேவகியையும் சிறைக்குள் அடைத்து வைத்தான். தேவகிக்குப் பிறந்த ஆறு ஆண் குழந்தைகளையும் வசுதேவன் வாக்குப்படி கம்ஸனிடம் ஒப்படைக்க அவன் அத்தனை குழந்தைகளையும் கொன்று தீர்த்தான். தேவகியின் ஏழாவது குழந்தை சங்கர்ஷன் என்ற பெயருடன் சிறையை விட்டு வெளியே சென்று மறைந்து, வசுதேவரின் இரண்டாவது மனைவியாகிய ரோகினியிடம் வளர்ந்து வந்தது. தேவகிக்குப் பிறந்த எட்டாவது குழந்தை வசுதேவரால் நந்தகோபன் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. நந்தகோபன் வீட்டில் அவருடைய மனைவி யசோதை பெற்ற பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு அதற்குப் பதிலாக இந்த ஆண் குழந்தையை தேவகியிடம் விட்டுவிட்டு வசுதேவர் சிறைச் சாலைக்கு மீண்டார். விடியற்காலையில் குழந்தை பிறந்த சேதி அறிந்த கம்ஸன், இது பெண் குழந்தை என்று கூடப் பார்க்காமல் கொல்ல யத்தனிக்கையில் அக்குழந்தை ஆகாயத்தில் மறைந்து எட்டுக் கைகளுடைய காளிதேவியாக மாறி, முட்டாள் கம்சனே! போன ஜென்மத்தில் உன்னைக் கொன்ற அதே ஆள் இப்பொழுது பிறந்து விட்டான். அவன் தான் உன்னைக் கொல்லப் போகிறான்’ என்று கூறிவிட்டு மறைந்தது. எட்டுக் குழந்தைகளும் பிறந்துவிட்ட காரணத்தால் தேவகியையும், வசுதேவரையும் கம்சன் விடுதலை செய்தான்.