பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/190

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வாயு புராணம் j61 திரிசூலத்தால் பொடியாயின. இறுதியில் சிவன் பீமனைக் கொன்று விட்டான். காமரூபனின் வேண்டுகோளின்படி பீமசங்கரன் என்ற பெயருடன் அங்கேயே லிங்க வடிவாகத் தங்கிவிட்டார். பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் இது ஆறாவது ஆகும். 7. விசுவநாதரும் வாரணாசியும் ஏழாவது ஜோதிர்லிங்கம் வாரணாசியில் உள்ள விசுவ நாதர் ஆகும். புண்ணியத் தலங்களில் எல்லாம் மிகச் சிறப்பு உடையதாகும். ஒருமுறை பிரம்மாவே இங்கிருந்து தவம் செய்தார். மிக உக்கிரமானதும், பிறர் எளிதில் செய்ய முடியாததும் ஆன அத்தவத்தைக் கண்டு விஷ்ணுவே தலையை உலுப்பிக்கொண்டார். உலுப்பிய பொழுது அவர் காதில் இருந்து ஒரு மணி வாரணாசியின் ஒரு பகுதியில் விழுந்தது. அப்பகுதிக்கு ‘மணிக்கரணிகை என்று பெயர் வந்தது. பிரளயகாலத்தில் உலகம் முழுதும் நீரில் மூழ்கி விடும் பொழுது, சிவன் தன்னுடைய சூலத்தால் வாரணாசியைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார். பிரளயம் முடிந்து உலகம் படைக்கப்படும் பொழுது வாரணாசியை அந்த இடத்தில் வைக்கிறார். ஒருமுறை சிவனையும், பார்வதியையும் கண்ட பிரம்மன், தன் ஐந்து முகங்களாலும் சிவனுடைய பெருமையைப் பாடினார். அதில் ஒரு தலை மந்திரங்களைத் தவறாகச் சொன்னதால் சிவன் அந்தத் தலையைக் கிள்ளிவிட்டார். பிராமணனாகிய பிரம்மனின் தலை கொய்யப்பட்டதால் சிவனை, பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. சிவனிடம் ஒட்டிக் கொண்ட அந்தத் தலை என்ன செய்தும் கீழே விழவில்லை. சிவன் வாரணாசி பக்கம் வந்த பொழுது தலை தானே கீழே விழுந்து விட்டது. எனவே வாரணாசியின் 11 مس. املأ