பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாயு புராணம் - 181 அவன் தோலைப் போர்த்திக் கொண்டு வந்து நின்றாள். சிவனிடம் வந்த பார்வதி தான் அணிந்திருந்த சிங்கத்தோலைச் சிவனிடம் கொடுத்து விட்டு, ருருவின் தோலைத் தான் அணிந்து கொண்டாள். யமன் சொல்லிய கதை ஒரு முறை பிரம்மாவின் மகனாகிய சனத்குமாரர் யமனைக் கண்டு பேசிவிட்டுப் போக வந்தார். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது பொன்னிறமான விமானத்தில் ஒருவர் வந்தார். உடனே யமன் எழுந்து மிக்க மரியாதையுடன் அவரைக் குசலம் விசாரித்து, பிரம்ம லோகத்தில் உங்கள் இடம் தயாராக உள்ளது. நீங்கள் அங்கே போகலாம் என்று வழியனுப்பிவிட்டு, உட்கார்ந்து பேசத் தொடங்கவும், மற்றொரு விமானத்தில் இன்னொருவர் வந்து சேர்ந்தார். மறுபடியும் யமன் சகல மரியாதையுடன் வரவேற்று பிரம்ம லோகம் அனுப்பினான். இதைக் கண்டு ஆச்சரியப்பட்ட சனத்குமாரர், 'யமனே! உன்னைக் கண்டு எல்லோரும் அஞ்சுகிறார்கள். உன்னிடம் வந்த இவர்களுக்கு இவ்வளவு மரியாதை செய்தது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இவர்கள் யார்?' என்று கேட்டார். வைதிஷா என்ற நகரை தாரபாலா என்ற அரசன் ஆண்டு வந்தான். இவன் நாட்டில் ஒடும் விதஸ்தா என்ற நதியும், வேத்ரவதியும் சங்கமம் ஆகும் இடத்தில் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, ஒரு நரி பூசை செய்து வந்தது. கைலையில் பார்வதி தவம் செய்யச் சென்ற பொழுது சிவனிடம் வேறு யாரும் தன்னைப் போல் வேஷமிட்டு நெருங்கிவிடாதபடி பார்த்துக் கொள்ளுமாறு ஏவிவிட்டுப் பார்வதி சென்று விட்டாள். அதி என்ற அசுரன் பார்வதியின் வடிவை ஏற்றுக் கொண்டு சிவனிடம் வந்தான். உண்மையான பார்வதிக்கும் போலிப் பார்வதிக்கும் வேறுபாடு தெரியாத நந்தி இந்த