பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்க்கண்டேய புராணம் 281 ஜெய்மினியும் மார்க்கண்டேயனும் மிகப் பெரிய முனிவராகிய ஜெய்மினி ஒருமுறை மார்க்கண்டேயரைப் பார்க்க வந்தார். வந்தவர், “முனிவரே! எனக்கு அடிப்படையில் சில சந்தேகங்கள் உள்ளன. அவற்றைத் தெளிவுபடுத்திக் கொள்ள விடை கூறக் கூடியவர் தாங்கள் ஒருவரே. விஷ்ணு எங்கும் நிறைந்தவர். வடிவமும் உருவமும் அற்றவர். அப்படி இருக்க, அவர் ஏன் பூலோகத்தில் மனிதனாக கிருஷ்ணர் என்ற பெயருடன் பிறக்க வேண்டும்? பாண்டவர்கள் ஐவரையும் திரெளபதி ஏன் மணக்க வேண்டும்? அவருடைய பிள்ளைகளாகிய இளம் பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் ஒரே நேரத்தில் ஏன் கொல்லப்படவேண்டும்? இவைகளுக்கு விடைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார். அதற்கு விடையாக மார்க்கண்டேயர் கூறியதாவது: "முனிவரே! பிரார்த்தனை செய்யவே எனக்கு நேரம் போதவில்லை. உம்முடைய கேள்வி களுக்கு விடை அளிக்க எனக்கு அவகாசம் கிடையாது. இவ்வினாக்களுக்கு விடை கூறக் கூடியவர்கள் யார் என்று மட்டும் கூறுகிறேன். அவர்களிடம் சென்று உங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம். விந்தியமலையில் நான்கு பறவைகள் வாழ்கின்றன. அவை பிங்கக்ஷா, விவோதா, சுபுத்ரா, சுமகா என்ற பெயர்களால் அழைக்கப் படுகின்றன. அவை துரோணரின் பிள்ளைகள். அங்கே செல்லலாம்." இப்படிக் கூறியவுடன், ஜெய்மினி இடை மறித்து, “முனிவரே! பறவைகள் வேதம், சாஸ்திரம் இவற்றை நன்கு அறிந்துள்ளன என்கிறீர்கள். பறவைகள் எப்படி இவற்றை அறிய முடியும்? பறவைகள் எப்படிப் பேச முடியும்? அவற்றின் தந்தை என்று சொல்லப்படும் துரோணர் யார்?’ என்று கேட்டார். மார்க்கண்டேயர் கூறிய விடை வருமாறு: