பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 பதினெண் புராணங்கள் தன்னிடத்திற்குப் போகக் கூடுமேயானால் மணத்தை ஏற்றுக் கொள்வதாகக் கூறினாள். பிரமுச்ச முனிவர் தன் தவ வலிமையால் ரேவதியை ஆகாயத்திற்கு ஏற்றினார். துர்கம மன்னனைப் பார்த்து, மகளை மணம் செய்து கொண்ட மகிழ்ச்சியில் “என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அந்த மன்னன், “முதல் மனுவாகிய சுவயம்பு மனுவின் பரம்பரையில் வருகிறவன் நான். அடுத்த மனு என் மகனாகப் பிறக்க வேண்டும்" என்றான். அப்படியே ஆகட்டும்! என்றார் முனிவர். துர்கமாவுக்கும், ரேவதிக்கும் பிறந்த குழந்தை 'ரைவத' மனு என்ற பெயரைப் பெற்று உலகை ஆட்சி செய்தது. இந்த மனுவின் காலத்தில் இருந்த இந்திரனுக்கு ரிபு என்ற பெயர் இருந்தது. ஆறாவது மனுவின் கதை சக்வீசா என்ற பெயருடன் வாழ்ந்த ஆறாவது மனுவின் கதை. இந்த மனு பழம்பிறப்பில் பிரம்மாவின் கண்ணி லிருந்து தோன்றியதால், இவனுக்கு சக்oசா என்று பெயர். (சக்ஷி-கண்). அனமித்ர என்ற முனிவருக்கும், பத்ரா என்ற மனைவிக்கும் ஒர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஜதீஸ்மரா சக்தி உண்டு. பத்ரா, குழந்தையை மடியில் போட்டுக் கொஞ்சிக் கொண்டிருந்தாள். திடீரென்று குழந்தை சிரித்தது. ஆச்சரியப்பட்ட தாய் “ஏன் சிரிக்கிறாய்?” என்றாள். “சிரிக்காமல் என்ன செய்வது? பக்கத்தில் இருக்கும் பூனை சந்தர்ப்பம் கிடைத்தால் என்னைத் தின்னலாம் என்று பார்க்கிறது. ஜதஹர்ணி என்ற பெண் பிசாசும் சந்தர்ப்பம் கிடைத்தால் என்னைத் தின்னப் பார்க்கிறது. நீ மட்டும் என்ன? என்னைக் கொஞ்சுவதால் உனக்கு சந்தோஷம் உண்டாகிறது.