பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 பதினெண் புராணங்கள் அவிட்சாவிடம் முறையிட்டான். அவிட்சா மகனிடம் வந்து, "மகனே, பாம்புகளைக் கொல்லுவதை நிறுத்திவிடு” என்று கூறினான். மருத்தா தந்தை சொன்னதை ஏற்றுக் கொள்ளாமல், “என்னுடைய கடமை முனிவர்களைக் காப்பது? அவர்களுக்கு இடையூறு செய்யும் பாம்புகளைக் கொல்வது நியாயமானது" என்றான். தந்தைக்கும் மகனுக்கும் வாக்குவாதம் முற்றிவிட, தந்தை மகனைக் கொல்வதற்காக ஒரு தெய்வீக அத்திரத்தை எடுத்தார். முனிவர்கள் ஒடி வந்து தந்தை-மகன் சண்டையை நிறுத்தினார்கள். பாம்புகளும் இறந்த முனிவர்களை எழுப்பி விட்டன. முடிவுரை பறவைகள் ஜெய்மினி முனிவருக்கு மார்க்கண்டேய புராணத்தைச் சொல்லி முடித்தன. முனிவர் அப்பறவை களுக்கு நன்றி செலுத்திவிட்டுத் தன்னுடைய ஆசிரமத்திற்குத் திரும்பினார்.