பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/399

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


370 பதினெண் புராணங்கள் சிவராத்திரி அன்று உறங்காமல் விரதம் இருப்போரின் பாவங்கள் அனைத்தும் தொலைக்கப்படும். த்ரி மந்திரம் ஒவ்வொரு மனிதனுடைய உடம்பிலும், ஆணாயினும், பெண்ணாயினும் பல நூறு நரம்புகள் உள்ளன. அவற்றுள் 10 நரம்புகள் மிக மிக முக்கியமானவை. அவையாவன: இட பிங்கல, சுவrமுனா, காந்தாரி, ஹஸ்திஜிஷவா, பிரித, யஷ, அலம்புஷா, ஹீஹl சங்கினி என்பனவாம். இந்த நரம்புகளே உயிர் உடம்பிலிருக்க உதவுகின்றன. இழுத்து விடும் மூச்சுக் காற்று பிராணவாயு எனப்படும். இந்தப் பிராணவாயு அல்லாமல், அபான, சமான, உதான, வியான, நாக, கூர்ம, கிரிகர, தேவதத்தா, தனஞ்செயா என்ற ஒன்பது வகை வாயுக் களும் உடலில் இயங்குகின்றன. சிவனாலும் விஷ்ணுவாலும் கூட வணங்கப்படுபவள் காயத்ரி. இந்த தேவி எங்கும் நிறைந் திருக்கிறாள். ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் அன்ன வடிவாக இருக்கிறாள். ஒருவர் இந்த மந்திரத்தை ஏழு தடவை கூறினால், அவர்கள் பாவம் தொலைந்துவிடும். பத்து முறை கூறினால், சுவர்க்கம் செல்லலாம். நூற்றி எட்டு முறை கூறினால், பிறப்பினின்று விடுபடலாம். 'ஓம்' என்ற பிரணவத்துடன் இம்மந்திரத்தைத் தொடங்க வேண்டும். அரசனின் கடமைகள் அரசனின் தலையாய கடமை, நாட்டின் பகைவர்களை வெல்லுதலும், தன் நாட்டு மக்களை நன்கு காப்பாற்றுவதும், நாட்டிற்கு வளம் சேர்த்தலும் ஆகும். அவனுடைய எல்லைக்குள் இருக்கும் தவசிகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல், அவர்கள் தவம் நன்கு நடைபெறப் பாதுகாப்பும் உதவியும் செய்யவேண்டும். அரசனுடைய அமைச்சர்கள் அறிவுக்கூர்மை உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். அவன்