பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பவிஷ்ய புராணம் 395 காரியங்கள், விக்கினங்கள் என்று சொல்லப்படும் தடைகளால் நின்று போயின. மனிதர்கள் கணேசரிடம் பக்தியும் ஈடுபாடும் கொண்டார்கள். ஒன்றைத் தொடங்குவதற்கு முன் அவரை வேண்டிக் கொண்டு தொடங்கினதால் எல்லாவற்றிலும் வெற்றி அடைந்தார்கள். நன்கு அரசாளாத அரசர்கள், நன்கு பாடம் சொல்லாத ஆசிரியர்கள். நன்கு படிக்காத மாணவர்கள் ஆகியவர்களிடத்து கணேசர் கோபம் கொள்கிறார். அவர் கோபித்தால் வாணிபம் நன்கு நடைபெறாது. வேளாண்மை நன்கு செழிக்காது. அவரைத் திருப்திப்படுத்த வேண்டுமே யானால், உள்ளன்போடு பூ பிரசாதம் முதலியவற்றைப் படைக்க வேண்டும். (கனேசருடைய தோற்றம் பற்றிச் சொல்லும் ஏனைய புராணங்கன் கணேசர், சிவனுக்கும் பார்வதிக்கும் பிள்ளையாகத் தோன்றியவர் என்றே கூறுகின்றன. பவிஷ்ய புராணம் மட்டும். இவர் பிரம்மன7ல் படைக்கப்பட்டார் என்று பேசுகிறது சூரியன் - மாறுபட்ட கதை தட்சன் மகளாகிய அதிதி காசியப முனிவனை மணந்து தேவர்களைப் பெற்றாள். ஒரு சமயம் அவர்கள் இருவருக்கும் ஒரு முட்டை குழந்தையாகப் பிறந்தது. இந்த முட்டை எவ்வித சலனமும் இல்லாமல் அப்படியே இருந்தது. அண்டா என்ற வடமொழிப் பெயருடைய முட்டை செத்துவிட்டது என்று தாய் அதிதி கருதினாள். ஆனால், முட்டையை நன்கு கவனித்த காசியப முனிவர், முட்டை சாகவில்லை என்று கண்டு 'சாகாத முட்டை என்ற பொருளுடைய மித்ருத்தஏரண்டா என்று பெயரிட்டார். ஆறிலிருந்து பிறந்த குழந்தை மிருத்த அண்டாவாக மாறி மார்த்தாண்டன் என்றாயிற்று. இதன் பிறகு உள்ள சம்ஜனா கதை மற்ற புராணங்களில் கூறப்