பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 பதினெண் புராணங்கள் கிருஷ்ணனின் மார்பிலிருந்து தர்மதேவதை தோன்றினாள். கிருஷ்ணனின் வாயிலிருந்து, வெள்ளை நிற உடையுடுத்தி ஒரு கையில் புத்தகமும், ஒரு கையில் வீணையும் கொண்டு கல்வித் தெய்வம் சரஸ்வதி அவதரித்தாள். கிருஷ்ணனின் மனத்திலிருந்து, தங்க நிறத்துடன், செல்வத்தின் அதிபதியான லட்சுமி தோன்றினாள். சொர்க்கத்தில் அவளுக்குச் சுவர்க்க லட்சுமி என்றும், அரசர்களிடையே ராஜலட்சுமி என்றும் பெயர் வழங்கப்படுகின்றன. கிருஷ்ணனின் நினைவு களிலிருந்து, போர்த் தெய்வமான துர்க்கை தோன்றினாள். எல்லா தெய்வங்களும் கிருஷ்ணனைப் பற்றிப் பாடிவிட்டுத் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர். கிருஷ்ணனின் நாக்கிலிருந்து தோன்றியவர் சாவித்திரி. சாவித்திரி மந்திரம் மிகப் புண்ணியமானதும், சக்தி வாய்ந்ததும் ஆகும். கிருஷ்ணனின் உணர்வு நிலையில் இருந்து மன்மதனும், மன்மதனின் இடப்பக்கமிருந்து ரதியும் தோன்றினர். பிறகு பஞ்ச பூதங்கள் தோற்றுவிக்கப்பட்டன. எங்கும் ஒரே நீர்ப்பரப்பு. அண்டம் என்ற பெயருடைய முட்டை கிருஷ்ணனிடம் இருந்து தோன்றியது. அந்த முட்டை யிலிருந்து ஒரு மாபெரும் வடிவம் தோன்றியது. இந்த வடிவமே விஷ்ணுவாகும். இவ்வடிவம் நீரில் மிதந்து கொண்டிருந்த பொழுது விஷ்ணுவின் இரண்டு காதுகளில் இருந்து மது, கைடவர் என்ற இரு அசுரர்கள் தோன்றினர். இந்த இரண்டு அசுரர்களும் தாம் தோன்றிய உடனேயே பிரம்மனைக் கொல்ல முனைந்தனர். ஆனால் நாராயணன் அவர்களைத் தன் தொடைகளின் இடையே வைத்து நசுக்கிக் கொன்றார். அந்த இருவரின் சடலத்தின் கொழுப்பிலிருந்து உலகம் உண்டாயிற்று. மேதா என்று சொல்லப்படும் கொழுப்பிலிருந்து உலகம் உண்டானதால், அதற்கு மேதினி என்ற பெயர் வந்தது. (மற்ற புராணங்களில் உலகத் தோற்றம் பற்றிக் கூறியதற்கும், இப்