பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 பதினெண் புராணங்கள் ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும். பதினான்கு விதமான பழங்கள் படைக்கப்பட வேண்டும். பராசர முனிவர், மத்ர அரசன் அசுவபதிக்கு, இவ்விரதங்களை எடுத்துக்கூற, அவ்வரசனும் இதனைக் கடைப்பிடித்தான். சாவித்திரி தேவி அவன் முன் தோன்றி, அவ்வரசனுக்கும், அவன் மனைவி மாலதிக்கும் தான் மகளாகத் தோன்றுவதாக வரம் அளித்தாள். துயுமத்சேன அரசன் மகன் சத்தியவானுக்கும் சாவித்திரிக்கும் திருமணம் நடந்தது. ஒரு வருடத்திற்குப் பிறகு ஒருநாள் காட்டில் பழங்கள் பறிக்கச் சென்ற சத்தியவான் மரத்தில் இருந்து கீழே விழுந்து இறந்து போனான். யமன் சத்தியவானின் உடலை எடுத்துச் செல்லும் பொழுது, சாவித்திரியும் யமனைத் தொடர்ந்து சென்றாள். தொடர்ந்து வந்த சாவித்திரியிடம் யமன், ஒருவர் தன்னுடைய பூதஉடலை விட்டுவிட்டே யமலோகம் செல்ல முடியும் என்றும், அவரவர் கர்மவினைப்படி மரமாகவும், பறவையாகவும், மனிதராகவும் பிறக்கிறார்கள் என்றும், அக்கர்மவினைக்கேற்க அவர்கள் உலகில் வாழும் காலம் வரையறுக்கப்படுகிறது என்று கூறிவிட்டு, சத்தியவானின் முன்ஜென்ம கர்மவினையினால் அவன் இப்பிறப்பில் வெகுவிரைவில் இறந்துவிட்டான் என்று கூறி, சாவித்திரியை வீட்டிற்குச் செல்லுமாறு கூறினான். சாவித்திரி வீட்டிற்குச் செல்லாமல், யமனிடம் மேலும் மேலும் கர்மவினை பற்றிக் கேட்டாள். இதனால் மனம் மிக மகிழ்ந்த யமன் அவளுக்கு என்ன வரம் வேண்டும் எனக் கேட்க, சாவித்ரி, தனக்கும் தன் கணவனுக்கும் நூறு குழந்தைகள் பிறக்க வேண்டும் என்று கேட்டாள். இவ்வரத்தை அவளுக்கு அளித்த யமன், வேறு வழியின்றி சத்தியவானுக்கு உயிர் கொடுத்து இவ்வுலகிற்குக் கொண்டு வந்தான். சாவித்திரி தன் தந்தைக்கு நூறு மகன்கள் பிறக்க வேண்டும் என்ற வரத்தையும், தான் தன் கணவருடன் பல ஆண்டுகள் இப்