பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலிங்க புராணம் 465 இலிங்கம் லோமஹர்ஷனர் மற்ற முனிவர்களுக்குக் கூறிய இலிங்கம் பற்றிய கதை பிரம்மா, விஷ்ணு இருவரும் இலிங்கத்தின் அடி முடி தேடிய கதை முன்னரே சிவ புராணத்தில் கூறப் பட்டுள்ளது. இங்கு சொல்லப்பட்டுள்ள புதிய பகுதி வருமாறு: இலிங்கத்தின் இடையே தோன்றிய சிவன் படைக்கும் தெய்வ மாகிய பிரம்மனும் காக்கும் தெய்வமாகிய விஷ்ணுவும், அழிக்கும் தெய்வமாகிய நானும் ஒரே பரப்பிரம்மத்தில் இருந்து தோன்றியவர்கள் ஆவோம். நமக்குள் சண்டை போட்டுக் கொள்ளுதல் தேவை இல்லை. இலிங்கத்தில் இருந்துதான் அனாதியான முட்டை தோன்றிற்று' என்று கூறிவிட்டு, இலிங்கத்தில் தோன்றிய சிவன் பிரம்மா, விஷ்ணு ஆகிய இருவருக்கும் சிவகாயத்திரி உபதேசம் செய்தார். பிரம்மனும், விஷ்ணுவும் நைமிசாரண்ய வனத்தில் முனிவர்கள் லோமஹர்ஷனரைப் பார்த்து படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்கள் செய்யும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் பிரம்மாவை மட்டும் விஷ்ணுவின் பிள்ளை கூறுகிறார்களே, அது ஏனென்று கேட்க, லோம ஹர்ஷனர் கூற ஆரம்பித்தார். 'முன்னொரு காலத்தில், பிரபஞ்ச உற்பத்திக்கு முன்னர் எங்கும் நீரே நிறைந்திருந்தது. தண்ணின் மேல் படுத்திருந்த நாராயணன் பொழுது போகாமல் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் தம்முடைய கொப்பூழைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு மாபெரும் தாமரைப் பூ கொப்பூழினின்று வெளிப்பட்டது. அந்த இதழ்களின் நடுவே பிரம்மன் கம்பீரமாக அமர்ந்திருந்தார். சிலகாலம் கழித்து அந்தத் தாமரையினின்று இறங்கி வந்து விஷ்ணுவைப் பார்த்து ւ.ւ,-30