பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498 பதினெண் புராணங்கள் மந்தரமலை என்ற மலை, பூமியில் அமைந்துள்ளது. வைஷ்ணவி தேவி திருமணம் செய்து கொள்வதில்லை என்று முடிவு செய்து, மந்தர மலைக்குச் சென்று தவம் இயற்றினாள். (வராக புராணம் வைஷ்ணவி தேவியும், சரஸ்வதியும் ஒன்றே எனக் கூறுகிறது ஒரு சமயம் வைஷ்ணவி தேவியின் தவம் சற்றுக் கலைந்து, அதிலிருந்த லட்சக்கணக்கான அழகான பெண்கள் தோன்றினர். இந்தச் சிறு தேவதைகளுக்கென ஒரு அழகிய அரண்மனையை நிர்மாணித்தனர். பிரம்மன், இந்திரன் ஆகியோரைக் காணச் சென்றுகொண்டிருக்கும் பொழுது, இந்த அழகிய வடிவம் கொண்ட வைஷ்ணவி தேவி, மற்றும் உள்ள பெண்களைப் பார்த்து வியப்படைந்தார். இவர்களைக் கண்டவுடன், மிகவும் சக்தி வாய்ந்த மகிஷாசுரனை ஒழிப்பதற்கு ஒரு நல்ல உபாயத்தைக் கண்டார் நாரதர். கடற்கரையில் மாபெரும் நகரம் அமைத்து அதில் ஆட்சி செய்து வந்த மகிஷாசுரனைக் காணச் சென்றார் நாரதர். அவனைப் பார்த்து மந்தர மலையில் வைஷ்ணவி தேவி என்ற அழகான பெண்ணைப் பார்த்தேன். உன்னைவிடச் சிறந்த மணவாளன் அவளுக்குக் கிடைப்பது கடினம். யாரையாவது அனுப்பி அவளை மணம் பேசி முடித்துக் கொள் என்று கூறிப் போனார் நாரதர். நாரதர் பேச்சைக் கேட்ட மகிஷன் தன் பிரதானிகள் முதலானவர்களை அழைத்தான். அவர்களில் யாரையாவது அனுப்பி மணம் பேசலாம் எனக் கூறினார். மகிஷன் அதற்கு ஒப்புக் கொள்ளாமல் பெரிய படையை விருபாக்ஷன் தலைமையில் அனுப்பிப் போரில் வைஷ்ணவியைத் தோற்கச் செய்து மணந்து கொள்வதே சரி என்று எண்ணினான்.