பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வராக புராணம் 523 சாந்தி விரதம் கார்த்திகை மாதம் சுக்கிலபட்சம் பஞ்சமி திதியில் கடைப் பிடிக்கப்படும் இவ்விரதம் குடும்பத்தில் ஏற்படும் துன்பங்களை விலக்கிவிடும். இவ்விரதம் அனுஷ்டிப்பவர்கள் சூடான உணவை ஒரு வருட காலத்திற்குத் தவிர்க்க வேண்டும். ஆதிசேஷனை வணங்க வேண்டும். புத்ரேஷ்டி விரதம் இவ்விரதம் இருப்பவர்கள் பால், தயிர் முதலியவற்றைத் தானமாகக் கொடுக்க வேண்டும். குழந்தை கிருஷ்ணனை வணங்க வேண்டும். 哆,哆 பத்ரஷ்வா அரசனுக்கும், அகஸ்திய முனிவருக்கும் இடையே யுகங்கள் பற்றிய உரையாடல் நடைபெற்றது. கலியுகத்தில் வர்ணாசிரம தர்மங்கள் அழிந்துவிடும். இந்த யுகத்தில் நல்லவை அழிந்து, கொடுமைகளே தலைதுாக்கி நிற்கும். உண்மையான சக்தி இல்லாமல், வெறும் சடங்குகள் மூலம் இறைவனை அடைதல் இயலாது. நாராயணனே அனைத்திலும் முன்நிற்பவர் என்று சிவபெருமானே கூறியுள்ளார். ஆதலால் படைக்கப்பெறும் பொருட்கள் யாவும் விஷ்ணுவுக்கே முதலில் படைக்கப்பெற வேண்டும். கலியுகம் என்பது, நாராயணனால் தோற்றுவிக்கப் பட்டாலும், கெளதம முனிவரின் சாபம் பற்றித் தெரிந்து கொண்டால் மட்டுமே, கலியுகம் பற்றி அறிந்து கொள்ள முடியும். அப்படி கெளதம முனிவரின் சாபம் என்ற ஒன்று இல்லையென்றால், கலியுகம் என்பது வேறுமாதிரி அமைந் திருக்கும். ஒருமுறை கெளதம முனிவர், அரிசியும் பழங்களும் எப்பொழுதும் தன்னிடம் நிறைய இருக்க வேண்டும்