பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்கந்த புராணம் 547 அதே வஜ்ராயுதத்தைப் பிடுங்கிக் கொண்டு இந்திரனை அடித்துக் கீழே தள்ளினான் தாரகன். "பேடித்தன்மையுள்ள இந்திரனே! உன்னைப் போல ஒரு வெட்கங்கெட்ட கோழை தேவர்களுக்கு அரசனாக இருந்தால், ஒரு குழந்தையைத்தான் போருக்கு அனுப்பமுடியும்” என்று எள்ளி நகையாடினான். இந்திரனுக்கு உதவியாக வந்த வீரபத்திரனை மார்பில் குத்திக் கிழித்துவிட்டான். இந்த நிலையில் ஸ்கந்தன் போர்க்களத்தில் புகுந்தார். இருவருக்கும் இடையே பெரும் போர் தொடங்கிற்று. வலிமை வாய்ந்த ஆயிரக்கணக்கான ஆயுதங்களை அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் பிரயோகித்துக் கொண்டனர். ஆனால் இந்த ஆயுதங்களால் இருவருக்கும் ஒரு தீங்கும் உண்டாகவில்லை. ஒருமுறை தாரகன் எய்திய ஈட்டி கந்தன் மார்பில் பட அவர் மயக்கமாக, ஆனால் மறு விநாடியே சுயநிலை வரப்பெற்றுப் போருக்குத் தயாரானார். கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள். முனிவர்கள் ஆகியோர் ஆகாயத்தில் கூடி நின்று இந்தப் போரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து இவர்களில் யார் ஜெயிப்பார்கள் என்று சொல்லுங்கள் என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த ஸ்கந்தன் 'அஞ்ச வேண்டா. மிகவும் சமர்த்தனான இந்த அசுரனை நான் கொன்றுவிடுவேன்’ என்று கூறிவிட்டு அவர் வேலை எறிய அது தாரகன் தலையை வெட்டிற்று, என்று கூறுவது ஒரு புராணம். (வேவினால் குத்தலாமே தவிர தலையை வெட்டுவது இயலாத காளியம் என்ற கருத்தை மனத்தில் கொண்டு இரண்டாவது வகை ஸ்காந்தம் முருகன் வேலை எறிந்தான் என்றும், அது த7ரகன் ம7ர்பைக் கழித்தது என்றும், அது கழித்ததோடல்லாமல் அவனை பூமியில் தள்ளி பூமிக்குள்ளும்