பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/598

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்கந்த புராணம் 569 யமனைப் போகச் சொல்லிவிட்டு, லட்சுமணனிடம் விஷயத் தைக் கேட்டறிந்தார். உடனே வெளியில் வந்து துர்வாசரை உபசரித்து உணவிட்டு அவரை அனுப்பிவிட்டான். இவ்வளவும் முடிந்தவுடன் ராமன், தான் விதித்த ஆணையைத் தானே மீற முடியாமல் தம்பி லட்சுமணனைக் கண்ணிருடன் அரண் மனையை விட்டு வெளியே அனுப்பிவிட்டான். வெளியே வந்த லட்சுமணன் சரயு நதிக்கரையில் தவம் செய்யத் துவங்கினான். அப்பொழுது ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேஷன், ஆயிரம் தலைகளிலும் மாணிக்கங்கள் மின்ன லட்சுமணன் முன்னே வந்து நின்றது. லட்சுமணன் எதிரிலே ஆயிரம் குழிகளை வெட்டிற்று. இப்பொழுது இந்திரன் முதலான தேவர்கள் லட்சுமணனைப் பார்த்து, விஷ்ணு லோகத்தில் நீ இருக்க வேண்டிய நிலையான இடத்திற்கு இப்பொழுது செல்லலாம். உன் அவதாரத்தின் மூலமாகிய ஆதிசேஷன் உனக்கு முன்னே நிற்பதைக் காண்பாயாக தேவர்கள் லட்சுமணனை விஷ்ணு லோகம் அழைத்துச் சென்றனர். லட்சுமணன் தங்கி இருந்ததும், ஆயிரம் குழிகளை உடையதுமான அந்த இடம் சஹஸ்ரதாரா என்ற தீர்த்தமாகச் சிறப்புப் பெற்றது. r இந்தத் தீர்த்தம் தனிச் சிறப்புடையது. ஆவணி மாதம், சுக்கிலபட்சம் பஞ்சமி திதியாகும் அந்த நாளில் முனிவர்கள் எல்லாம் கூடி, ஆதிசேஷனை வணங்குகின்றனர். இராமேஸ்வர தீர்த்தம் நைமிசாரண்ய வனத்தில் முனிவர்கள் எல்லாம் கூடி சூதந முனிவரிடம் புராணம் கேட்கத் தயாராக இருந்தனர். அப்பொழுது ராமேஸ்வர தீர்த்தப் பெருமையை அவர் சொல்ல ஆரம்பித்தார்.