பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/621

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாமன புராணம் 593 யாரை?’ என்று நாரதர், புலஸ்தியரைக் கேட்க, அவன்தான் மதன் என்றும், காமன், கந்தர்வன் என்றும் அனங்கன் என்றும் அழைக்கப்படும் காதலுக்குத் தேவனவன் என்று புலஸ்தியர் கூற, அனங்கன் என்று ஏன் பெயர் வந்தது என்று நாரதர் கேட்க, 'அவன் சிவனால் எரிக்கப்பட்டான்' என்று விடையளித்தான் புலஸ்தியன். சிவன் அவனை எரித்த வரலாற்றையும் கூறத் தொடங்கினார். தட்சயக்ளுத்தைக் கேள்விப்பட்டு சதி உயிரை விட்டதில் இருந்து சிவன், சதியைப் பிரிந்த துயரத்தில் மிகவும் ஆழ்ந்து போனார். சில நேரம் நாட்டியமாடியும், சில நேரம் ‘ஓ’ என்று குமுறியும் மனநிம்மதியின்றி அலைந்தார். பிரிவினால் ஏற்பட்ட துடு மிகுதிப்பட்டமையில் ஒவ்வொரு தீர்த்தமாகச் சென்று நீராடத் தொடங்கினார். காளிந்தி நதியில் அவர் நீராட இறங்கியதும் அந்த நதியின் நீரே கருமையாக மாறியது. அப்பொழுது முதல் சிவனுக்கு ஏப்பம் அதிக சப்தத்துடன் வரலாயிற்று. அதை அடக்க முடியாத சிவன் ஏப்பமிட்டுக் கொண்டே இங்குமங்கும் அலைந்தார். வழியில் குபேரன் மகனாகிய பாஞ்சலிகாவைக் கண்டு, என்னுடைய ஏப்பத்தை நீ வாங்கிக் கொண்டால் உன்னை வாழ்த்துவேன் என்றார். அவன் அதனை வாங்கிக் கொண்டதால் அவன் பாஞ்சாலேஸ் வரன் என்று வணங்கப்பட்டான். அதன் பிறகு சிவன் விந்திய மலைப்பகுதிக்குச் சென்றார். அங்கே தவம் செய்து கொண் டிருக்கும் பொழுது திடீரென்று அடி, முடி காண முடியாத லிங்க வடிவை எடுத்தார். அதனால் உலகம் முழுவதும் ஏற்பட்ட அதிர்ச்சியும், பூகம்பமும், மிகவும் அஞ்சத்தக்கனவாக இருந்தன. இதைக் கண்டு அஞ்சிய பிரம்மன் விஷ்ணுவிடம் சென்று அதிர்ச்சியின் காரணம் கேட்டார். விஷ்ணு, சிவன் விந்திய மலைப் பிரதேசத்தில் லிங்க வடிவெடுத்ததன் விளைவாகும் இது என்று கூறினார். இருவரும் விந்திய цц.-38