பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/696

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

668 பதினெண் புராணங்கள் வில்லை. இந்த உடம்பை உன் எதிரிலேயே போக்கிக் கொள்ளப் போகிறேன். போவதற்கு முன்னர் நான் இடும் சாபத்தைப் பெற்றுக்கொள். தேவலோகத்தில் இருக்கின்ற நீ இறந்து பூலோகத்தில் பிரச்சேனர்கள் மகனாகப் பிறக்கக் கடவாயாக" இதைக் கேட்ட தட்சன், நடுங்கிப் போய்விட்டான். "மகளே! நீ எல்லா உலகங்களுக்கும் தாய் என்பதை மறந்துவிட்டேன். உன் கொடுமையான சாபத்தில் இருந்து எனக்கு விடுதலை தர வேண்டும்” என்று வேண்டிக் கொண்டான். அதற்கிணங்கிய சதி, பூமியில் பிறந்தாலும் என்னிடமும் சிவனிடமும் பக்தி கொண்டவனாகப் பிறப்பாயாக. என்னுடைய பெயரில் வழங்கும் நூற்று எட்டுத் தீர்த்தங்களில் நீ நீராடுவாயாக. இவற்றையெல்லாம் செய்து முடித்த பின்பு உன் சாபம் நீங்கும் என்று கூறி தன் உடம்பைப் போக்கிக் கொண்டாள். பிரம்மதத்தா முன்னொரு காலத்தில், கெளசிக முனிவனுக்கு ஏழு மகன்கள் ந்தனர். கெளசிகன் இறந்த பிறகு இவர்கள் கார்க முனிவனின் சீடர்களாக வாழ்ந்தனர். அப்போது திடீரென்று பஞ்சம் வந்து உயிர்கள் செத்து மடிந்தன. கார்க முனிவர் தமது பசுக்களை எல்லாம் காட்டிற்கு ஒட்டிச் சென்று வளர்க்குமாறு ஏழு சீடர்களையும் ஏவினார். அந்த எழுவரும் காட்டில் வாழும் பொழுது, பசுக்களுக்குப் புல் கிடைத்தாலும், இவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. எழுவரும் ஒரு யோசனை செய்து ஒரு முடிவிற்கு வந்தனர். பசுவில் ஒன்றினைக் கொன்று சாப்பிட முடிவு செய்தனர். எழுவரில் இளையவன் “பசு வதை மிகவும் கொடிய பாவம். ஆனாலும் இது தவிர வேறு வழியும் தெரியவில்லை. எனவே இறக்கின்ற மனிதர்களுக்குச் செய்யும் இறுதிக் கடன்களை இப் பசுவிற்கும் செய்துவிட்டுப் பிறகு கொன்று தின்னலாம்" என்றான்.