பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/713

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மச்ச புராணம் 685 மகிழ்ச்சி அடைந்தன. முனிவர்கள் பதறி நடுங்கினர். உரிய காலத்தில், தாரகன் அசுரர்களின் அரசனாகப் பதவி ஏற்றான். தாரகன் தவம் தாரகன் பிறந்ததிலிருந்தே தேவர்களைப் பழி வாங்க வேண்டும் என்ற உறுதியோடு இருந்தான். ஆனால் வரபலம் இல்லாமல் தேவர்களை எதிர்ப்பது இயலாத காரியம் என்பதை அறிந்த தாரகன், தவம் செய்ய புறப்பட்டான். பரிபத்திர மலைக்குச் சென்று அங்குள்ள குகையில் தவத்தை மேற் கொண்டான். சில நாட்கள் ஒன்றும் உண்ணாமலும் சில நாட்கள் தண்ணிரை மட்டும் குடித்தும், சில நாட்கள் பச்சை இலைகளை மட்டும் தின்றும் தவம் செய்தான். இறுதியாக அக்கினியை வளர்த்து தன் உடம்பில் உள்ள சதைகளை நெருப்பில் இட்டுத் தவம் செய்தான். அப்போது பிரம்மன் அவன் எதிரே தோன்றி, "இது போதும் உன்னுடைய உடலை அறுக்கத் தேவையில்லை. உன் தவத்தை மெச்சினேன். உனக்கு வேண்டும் வரத்தைக் கேள்” என்று சொல்ல, தாரகன் ஒரு வரத்தைக் கேட்டான். "என்னை யாரும் வெல்லக் கூடாது. சாவே என்னை நெருங்கக் கூடாது” என்ற வரத்தைக் கேட்டவுடன், பிரம்மன், "சாகாதவர்களே மூன்று உலகத்திலும் இல்லை. ஆகவே சிரஞ்சீவியாய் இருப்பது இயலாத காரியம். வேறு எப்படியானாலும் உன் வரத்தை மாற்றிக் கேள்” என்று பிரம்மா சொல்ல, தாரகன், "அப்படி எனக்குச் சாவு வருவ தானால் ஒரு ஏழு வயது பாலகன் மூலம் வரட்டும்” என்று கேட்டான். பிரம்மன் அந்த வரத்தைத் தந்துவிட்டு மறைந்தார். தேவாகரப் போர் தாரகன் பிரம்மனிடம் இருந்து வரத்தைப் பெற்ற பிறகு மிகப் பெரியதொரு படை திரட்டலானான். ஆயிரக்கணக்கான யானைகள், குதிரைகள் ஆகியவற்றைச் சேர்த்து, ஜம்பா,