பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டும்; படைவகுப்பின் ஒவ்வொரு நிலையிலும் தான்ே முன்னின்று போரிடல் வேண்டும் என்பதை உணர்ந்தான்், உணர்ந்த அக்கணமே, சிவந்த பிடரிதொங்க செம்மாந்து நிற்கும் தன்போர்ப்பரிமீது பாய்ந்து பகைவர்தம் குதிரைப் படையைத் தாக்கினன். சிறிது பொழுதிற்கெல்லாம் அப். படைகெட்டது. அப்படைநிலைகுலையும் தருவாயில், அவர்தம் களிற்றுப்படை களம்புகுந்து கலாம் விளைக்கத் தொடங்கிற்று. அவ்வளவே, கு தி ைர மீ து அமர்ந்திருந்த கோமகன், முகபடாம் அணி செய்ய, பொன்னரிமாலை மின்ன, காண்பவர் உள்ளமும் உடலும் ஒருங்கே கலங்கத்தக்கக் காட்சியுடைய தாகித், தன்னைத்தொடர்ந்து வந்துகொண்டிருந்த தன் அரச யானைமீது அமர்ந்து கொண்டான். வந்த களிற்றுப்படை கணப்பொழுதில் பின்னிட்டுவிட்டது. வேழப்படையும் வீணுகக் கண்ட பகைவர், தேர்ப்படை கொண்டு, தாக்கத் தலைப்பட்டனர். கொடிபறக்கும் நெடிய தேர்கள் விடுவிடென வரக்கண்டதும், களங்காய்க்கண்ணியானும், விற்கொடி வானளாவப் பறக்கும் தன்போர்த் தேர்மீது அமர்ந்து அமர் புரிந்தான்். அத்தேர்படைகளும் அழிந்தன. கரி பரி தேர் என்ற முப்படையும் முறிபடவே, பகைவீரர்கள் வாள் வேல் வில் என்ற தம்கைப்படைகளோடு களம்புகுந்து காற்றென உலாவிப் போரிடலாயினர். ஊர்தி இழந்து பகைவர் போரிடத், தான்்மட்டும் தேர்மீது அமர்ந்து போரிடுவது, போர் அறமோ, போர்முறையோ ஆகாது என்பதை அறிந்திருந்த சேரர்குலக்குருசில், தான்ும் களம் இழிந்து கைப்படைகொண்டு கடும்போர் புரிந்தான்். இவ்வாறு, நாற்படைக்கும் தான்ே தலைமை தாங்கி, நெறிதவருது நின்று போரிட்டமையால் பாய்ந்து வந்த பகைவர்தம் .ெ ப. ரு ம் ப ைட, முற்றிலும் அழிவுற்றுப் போகவே, வாகை பூண்டு நிற்கும் வேந்தனின் வீறுகண்டு வியந்த புலவர், களவழிப்பா ஒன்றுபாடி, அவனைப் போற்றிப் புகழ்ந்தார்.

40