பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறந்து விட்டார். போர்முடிய விடுதிரும்பும் காவலன். ஆங்கு நிற்கும் அப்பாவலனைக் கண்டு, அவரை அணுகி ஆர்வமோடு ஆரத்தழுவிக் கொள்ளவே, தம் நினைவிற்கு வந்த புலவர், வென்றவாளோடு தம்முன் நிற்கும் வேந்தனையும், கொடும்போர்ஒயக் காட்சி அ ரி க் கு ம் களத்தையும் கண்ணுற்ருர், களக்காட்சி கண்களைக் கூசப்பண்ணும் கொடுமையுடையதாய் இருந்தது.

வாள்வீரர் வெட்டி வீழ்த்திய யானைக்கைகள், பனந்தோப்பில் வெட்டுண்டு வீழ்ந்து கிடக்கும் பனைமரங்களை நினைவூட்டுவவாயின. உயிரிழந்து வீழ்ந்த வீரர் உடல்களும், கரிபரிகளின் பருவுடல்களும் மலைமலையாகக் குவிந்து கிடந்தன; அவற்றை உண்ணும் ஆர்வம் பெருக, ஆங்கு வந்து குவிந்த பருந்துக் கூட்டமும், கழுகுக் கூட்டமும் அப்பிணங்கள்மீது அமர்ந்து உண்ணத் தெரடங்கின; அந்நிலை யில், மலைமீதிருந்து விரைந்து வந்து புரண்டு விழும் பெரிய நீர்வீழ்ச்சிபோல், அப்பிணமலைகளிலிருந்து வெளிபட்டுப் புறப்பட்ட செங்குருதி வெள்ளம், பொறித்து வைத்தன போன்ற புள்ளிகள் நிறைந்த கழுத்தினையுடைய பருந்துகளை யும், குடுமி கொண்ட கழுகுகளையும் ஈர்த்துக்கொண்டு, அப். பிணமலையின் ஒரு பகுதியைக், கீழ் மேலாகப் புரட்டிக்கொண்டு கூளிக்கூட்டம், தன் இருகரையிலும் கூடியிருந்து,பிணங்களைப் பற்றித் தின்றும் குரு தி கு டித் தும், குதித்துக்குதித்துக் கூத்தாடப், பெருக்கெடுத்து ஒடிக் கொண்டிருந்தது.

அக் காட்சியைக் கண்டு, புலவர், ஒருபால் அஞ்சி நடுங்கி ஞர் என்ருலும், இத்துணைக் கொடியபோரை, இத்துணை முதிய பருவத்திலும் செய்துகாட்டும் களங்காய்க்கண்ணியானின் திறம்உணர வாய்ப்பளித்த அக்களக்காட்சியை தாம் பண்டு கொண்ட ஐயத்தை அகற்றி விடவே, அக்காட்சியை

51